6.தமிழ் மற்றும் ஏனைய துறைகள் : மக்கள் தொடர்பு ஊடகம், கணினி முதலானவை

சமுதாய முன்னேற்றத்தில் இதழ்களின் பங்களிப்பு குறித்து விளக்குக

(OR)

  1. தமிழர்களிடையே பத்திரிக்கைகள் உருவாக்கிய விழிப்புணர்வு பற்றி எழுதுக.

தமிழர்கள் மத்தியில் பத்திரிக்கைகள் மூலம் எற்பட்ட விழிப்புணர்வு

  1. வாசிப்பு வழக்கம் ஏற்பட்டது.
  2. முடிதிருத்தங்களும், தேநீர் கடைகளும் படித்தல் அரங்குகளாக மாறின.
  3. அரசியல், நடப்பு விவகாரங்கள், கலை, விளையாட்டு பற்றிய செய்திகளில் விழிப்புணர்வு ஏற்பட்டது.
  4. ஜோதிடம் பார்ப்பது
  5. தினத்தந்தி கல்வியறிவற்றவனையும் ஒரு வாசகனாக மாற்றியது.
  6. தேசிய வாதம், தேசபக்தி வளர்ந்தது.
  7. டி.எஸ். சொக்கலிங்கம் “தமிழ்நாடு இதழின் ஆசிரியர் டாக்டர் வரதராஜீலு செய்த சேவைகளைப் பாரட்டினார்.
  8. தலையங்கங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் தமிழ் மக்களை புதிய பாதையில் செல்ல வழிகாட்டின.
  9. தினமணி கல்கி, ஆனந்த விகடன், கலைமகள் போன்றது உலக செய்தி (ம) நிகழ்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அடையாளம் காட்டியது
  10. இந்தியா, வெளிநாடுகளிலுள்ள மொழி, தேசம், மாநிலம், சங்கங்கள் பற்றிய அறிவு தமிழ் பத்திரிக்கைகளால் பரவலாக மேம்படுத்தப்பட்டது.
  11. பெண்களுக்கான இதழ்கள் வெளிவந்தன.

விடுதலைப்போராட்டத்தில் தமிழ் இதழ்கள்

  1. 1882 ல் கி. சுப்பிரமணியம் வார இதழாக சுதேசமித்திரனை துவங்கினார்.
  2. 1904ல் பாரதியார் சுதேச மித்திரனில் துணை ஆசிரியராக சேர்ந்தார்.
  3. 1907ல் இந்தியா – தமிழ் மாத இதழ்
  4. பாலபாரதம் – ஆங்கில வாரஇதழ் பாரதியார் துவங்கினார்.
  5. இதன் மூலம் நாட்டு மக்களிடையே விடுதலை உணர்வு வளர்ந்தது.
  6. 1917 ல் திரு.வி.க. தேசபக்தன் நாளிதழை துவக்கினார்.
  7. நவசக்தி, திராவிடன், தமிழ்நாடு, ஜெயபாரதி, சுதந்திரச் சங்கு, ஜனசக்தி போன்ற இதழ்கள் மக்களிடையே விடுதலை உணர்வை ஏற்படுத்தின.

 

  1. தமிழ் மக்களின் வாழ்க்கை பாணியில் சினிமாவின் கலை – விவரி.
  2. சினிமா தமிழ் இளைஞர்களையும் (ம) அனைத்து வகையான மக்களையும் மகிழ்விக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகம்
  3. குடும்ப சினிமாக்கள் பெண்களின் சோகத்தினை வெளிப்படுத்தத் துணை புரிந்தன.
  4. சினிமா உழைக்கும் மக்களுக்கு பொழுதுபோக்காக மாறியது.
  5. அரசியல், சமூக சினிமாக்கள் தமிழ் சமூகத்தில் பிரபலமாக உள்ளன.
  6. ரசிகர் மன்றம், கதா நாயகர்களின் வழிபாடு ஆகியவை ரசிகர்களால் பின்பற்றப்படுகின்றன.
  7. நடிகர்களின் நடை, உடைகள், முடி அலங்காரம் ஆகியவை ரசிகர்களால் பின்பற்றப்படுகின்றன.
  8. சினிமா பாடல்கள் மக்களிடையே செல்வாக்கைப் பெற்றன.
  9. இளைஞர்கள், மாணவ – மாணவிகள் நடிகர் / நடிகைகளால் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள்.
  10. சினிமாக்களால் ஒரு புதிய வகையான கலப்பு இசை நுழைந்தது.
  11. தமிழ் கலாச்சாரத்தில் ரேடியோவால் ஏற்பட்டவிளைவுகள் யாவை?
  12. முதலில் பொழுதுபோக்கின் கட்டத்தின், வானொலி மக்களுக்கு தகவல் தொடர்பு வழிமுறையாக பங்கேற்கிறது.
  13. 1950 – 1980 கால கட்டத்தில் சினிமா பாடல்கள் சோர்வாகவும் சோகமாகவும் இருந்த மக்களை மகிழ்வித்தன.
  14. வானொலியின் பாடல்கள் மக்கள் மனதில் ஒரு வகையான கனவுகளை உருவாக்குகின்றன.
  15. வயலும் வாழ்வும், விவசாயம், அதிக அறுவடை பெற விவசாயிகளுக்கு அதிக முன்னுரிமை செய்திகளை அளித்தன.
  16. வானொலி நாடகம், ஒலிச்சித்திரம், மக்களின் அன்றாட வாழ்வுகள், வானொலி நேயர்விருப்பம் என்ற பெயரில் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றினர்.
  17. பிபிசி (ம) ஸ்ரீலங்கன் தமிழ் ஒலிபரப்புக்ள தமிழ் பாடல்கள் (ம) செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்த்தன.
  18. விளம்பரங்கள் தயாரிப்பாளர்களின் பொருட்களை வாங்குவதற்காக வணிக ரீதியிலான தந்திரங்களை உருவாக்கியது.
  19. செய்திகள், தமிழ் இசையின் பாடல்கள், கர்நாடக இசைப் பாடல்கள், வானிலை செய்திகள் ஆகியவை தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலப்படுத்தப்பட்டன.
  20. இன்று டிவி (ம) வலைதளங்களை அடுத்ததாக வானொலி இரண்டாம் கட்டத்தில் உள்ளது.
  21. எப்எம் ரேடியோக்கள் மக்களுக்காக தொடர்ந்து ஒளிபரப்படுகின்றன.
  22. பிரதமர் மோடி வானொலி மூலம் இந்திய மக்களுக்கு மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம் மாதம் ஒருமுறை பேசி வருகிறார்.
  23. கணினி (ம) வலைதளம் மூலம் மாறிய மக்களின் வாழ்க்கை முறை விவரி.
  24. கணினி தமிழ் மக்களின் விட்டுப்பொருட்களில் ஒன்றாகின. உலக அளவில் தமிழ் மக்களின் அறிவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  25. இணையத்தின் இணைப்பால் புதிய வகை வருவாய் (ம) வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
  26. சிலர் கணினி மூலம் அதிகம் சம்பாதிக்க குற்ற வழிகளைப் பயன்படுத்துகின்றனர்.
  27. சிலர் தங்களது தவறான கருத்து (ம) வழிகளால் குற்றவாளிகளாக உள்ளனர்.
  28. மென்பொருள் வல்லுநர்கள் தங்கள் வேலைச் சுமையால் பாதிக்கப்படுகிறர்கள்.
  29. வெளிப்பற விளையாட்டுகள் குறைந்து வருகின்றன.
  30. டிவி சீரியல்களைத் தொடர்ந்து பார்த்து சினிமாக்கள் ஒரு புதுவகையான செயலற்ற தன்மையை உருவாக்குகின்றன.
  31. சைபர் குற்றங்கள் மோசமான நபர்களால் உருவாக்கப்படுகின்றன.
  32. தொலைகாட்சி மூலம் உலகமே வீட்டிற்கு வந்து விட்டது.
  33. வாசிப்பு பழக்கம் குறைந்தது, குடும்ப் உறுப்பினர்களிடையே பேச்சுகள் குறைந்து விருகின்றன.
  34. தொலைகாட்சி (ம) வலைத்தளங்களில் உள்ள தொடர்பு நம் மக்களை கலாச்சார ரீதியாக பாதிக்கின்றன.
  35. தொலைக்காட்சியைப் பார்ப்பதால் விருந்தோம்பல் குறைகிறது.
  36. விளம்பரங்களின் வணிக வணிக நோக்கம். மக்களது பழக்க வழக்கங்களில் பின்னடைவை உண்டாக்குகிறது.
  37. தமிழர்களிடையே சுற்றுலா மேம்படுத்தப்படுகிறது.
  38. தமிழர்களுக்கு விரைவில் உலக விவரங்கள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
  39. விளையாடுவதற்கான அறிவு, விளையாட்டு போட்டிகள், தடகள போட்டிகள் நமது இளைஞர்களின் தேசப்பற்றை மேம்படுத்துகின்றன.
  40. தமிழ்மொழியின் வளர்ச்சியில் மின்னணு ஊடகங்களின் பங்கினை விரிவாக விளக்குக.

மின்னணு ஊடகத்தின் பங்கு

  1. இணையத்தில் தமிழ்
  2. தமிழ் இணையத்தின் வளர்ச்சி
  3. தமிழ் இணையக் கல்விக்கழகம்
  4. மதுரைத் திட்டம்
  5. தமிழ் விக்கிப்பீடியா
  6. தமிழ் உள்ளீட்டுத் தொழில்நுட்பம்
  7. தமிழ் வலைப்பூ
  8. உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
  9. இணையத்தில் தமிழ் இடம்பெற்ற விதத்தினை விவரி.

இணையத்தில் தமிழ்

  1. தமிழர்கள் தங்கள் வாழிடங்களை ஐந்தினைகளாக வரையறுத்தனர்.
  2. இன்று விண்ணும் விண்சார்ந்த இணையமும் ஆறாம் திணையாக உருவெடுத்துள்ளது.

இணையத்தில் ஏறிய முதல் இந்திய மொழி

  1. 1995 ல் சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட மலாய், ஆங்கிலம், மாண்டரின் தமிழ் ஆகிய நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலைத்தளத்தில் முதலில் அரங்கேறியது தமிழ்
  2. சிங்கப்பூர் நாவ்யாங் பல்கலைக்கழக பேராசிரியர் நா. கோவிந்தசாமி சீனக்கணினி வல்லுநர்களோடு இணைந்து “தமிழ்நெட்’ என்ற எழுத்துருவினை உருவாக்கினார்.
  3. அவரால் தான் இணையத்தில் ஏறிய முதல் இந்திய மொழி தமிழ் என்ற பெருமை கிடைத்தது.

தமிழ் இணையத்தின் வளர்ச்சி

  1. 1996 ன் இறுதியில் உலகெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் பலரும் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி பயன்படுத்தத் தொடங்கினர்.
  2. இணையத்தில் தமிழ்த் தகவல் பரிமாற்றத்திற்கான முதல் உலக மாநாடு 1997 ஆம் ஆண்டு ‘தமிழ் நெட் 97’ என்ற பெயரில் சிங்கப்பூரில் நடைபெற்றது.
  3. அதில் தமிழ் எழுத்துரு குறித்துக் கணினித்தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் கலந்துரையாடினர்.
  4. 1999ல் நடைபெற்ற இரண்டாவது கணினி மாநாட்டில் கணினித் தமிழ்ச் சங்கம் உருவானது.
  5. தமிழ்நாடு அரசின் உயர்மட்ட ஆய்விற்குப்பின் ‘தமிழ் 99′ விசைப்பலகை உருவாக்கப்பட்டது.
  6. ‘ஒருங்குறிக் கூட்டமைப்பு’ உலகளவில் உள்ள அனைத்து மொழிகளுக்கம் ‘ஒருங்குறி’ என்ற குறியேற்ற முறையை உருவாக்கியது. இவ்வமைப்பில் தமிழக அரசு தமிழ் மொழிக்கான உறுப்பினரானது.
  7. தமிழ் ஒருங்குறிக்குறியேற்ற முறையில் இருந்த குறைகளைக் களைய, அரசுடன் தமிழ் இணையக் கல்விக் கழகம் (ம) கணினித் தமிழ்ச் சங்கம் இணைந்து முயற்சி செய்தது.
  8. இதனால் தான் இன்று இணையத்தில் தமிழை எளிதாக பயன்படுத்த முடிகிறது.

தமிழ் இணைய நூலகம்

(OR)

2.தமிழ் இணையக் கல்வி கழகத்தின் தோற்றத்தையும் குறிக்கோளையும் எழுதுக.

தமிழக இணையக் கல்விக்கழகம்

  1. 2001 ல் தமிழ் இணையக் கல்விக்கழகம் நிறுவப்பட்டது.
  2. இந்தியாவில் இணையம் வழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் வழங்க நிறுவப்பட்ட முதல் அமைப்பாகும்.
  3. 1999ல் நடைபெற்ற இரண்டாவது தமிழ் இணைய மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியானது.
  4. இது முழுநேர இயக்குநர் ஒருவரின் பொறுப்பில் செயல்படும்.
  5. இது தமிழ் இணையக் கல்விக்கழக ஆட்சிக்குழுவால் வழிநடத்தப்படுகிறது.

குறிக்கோள்கள்

  1. உலகளாவிய தமிழ்ச் சமுதாயத்தினருக்கும் தமிழியலில் ஈடுபாடுள்ள மற்றையோர்க்கும் தமிழ்மொழி இலக்கியம், பண்பாடு, பற்றிய கல்விச் சாதனங்களை உருவாக்கி இணையம் வழியாக அளித்தல்
  2. உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் உருவாக்கும் கல்வியறிவுச் சாதனங்களைத் தொகுத்து அவற்றைத் தமிழ் மக்களுக்கு வழங்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுதல்
  3. தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடத்திட்டங்களை வகுத்தல்
  4. மொழியறிவுக்காகவோ, சான்றிதழ், பட்டயம், பட்டம் பெறுவதற்காகவோ கற்போருக்கு வாய்ப்பளித்தல்
  5. தகுதிக்கு எற்பத தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழியாகச் சான்றிதழ் / பட்டயம் / பட்டம் வழங்க ஏற்பாடு செய்தல்
  6. 50 லட்சம் பக்கங்களுக்கு மேல் பதிவேற்றம் செய்யப்பட்ட மின்நூலகம், கணினித்தமிழ் ஆய்வுகள். மென்பொருள், செயலிகள் உருவாக்கம், கணினி தமிழ்ப் பேரவை முதலியன இதன் செயல்பாடுகளில் குறிப்படத்தக்கன.
  7. மதுரைத்திட்டம் (1998)
  8. இது 1998 ல் துவங்கப்பட்டது.
  9. அரசு, தனியார் உதவியோ, வாணிக நோக்கமோ இன்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ முயற்சி
  10. உலகின் வெவ்வேறு நாடுகளில் வாழும் 300க்கும் மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் சேர்ந்து இத்திட்டத்தைச் செயலாக்கம் செய்து வருகின்றனர்.
  11. இதற்காக தமிழ் இலக்கியங்களைக் கணினியில் உள்ளிட்டு, பிழை திருத்தி மின்பதிப்புகளாகத் தயாரிக்கின்றனர்.
  12. பின் இதனை மதுரைத்திட்டத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.
  13. விருப்பமுள்ளவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெறலாம்.
  14. தமிழ் விக்கிப்பீடியா (2003)
  15. இது 2003ல் துவங்கப்பட்டது.
  16. மயூரநாதன் என்பவர் இதற்கான முகப்புப் பக்கத்தை தமிழில் உருவாக்கியுள்ளார்.
  17. தமிழ் விக்கிப்பீடியா நூலின் ஆசிரியர் எம். சுப்பிரமணி
  18. இது கட்டற்ற பன்மொழிக் களஞ்சியத் தொகுப்பான வீக்கிப்பீடியாவின் ஒரு பகுதியாகும்.
  19. தலைமையிடம் -அமெரிக்கா
  20. விக்கிபீடியா அறக்கட்டளை என்ற வாணிக நோக்கமற்ற அமைப்பு இதனை நிர்வகித்து வருகிறது.
  21. ஆங்கிலம் தெரிந்தால் தான் கணினியைப் பயன்படுத்த முடியும் என்ற நிலையை இவை மாற்றியுள்ளன.

உள்ளீட்டில் புதிய முறைகள்

  1. கையெழுத்து உணரி
  2. ஒளிவழி எழுத்தறிவான்
  3. பேச்சுரை மாற்றி
  4. தமிழ்ச் சொற்செயலி
  5. சொற்பிழைத் திருத்தி
  6. சந்திப்பிழை திருத்தி
  7. தமிழ்ச்சொல் சுட்டி
  8. இலக்கணப் பிழை திருத்தி
  9. மின் அகராதி
  10. இயந்திர மொழி பெயர்ப்பி
  11. தமிழ் இணைய தளங்கள்

தமிழின் முதல் இணைய தளம் “தமிழ் சினிமா” மற்றொன்று “ஆ மின்னிதழ்”

  1. தமிழின் முதல் வலைப்பூ

2003ல் நவன் வலைப்பூ பிளாக்கர்ஸ்

2003ல் கார்த்திக்ராமாஸ் வலைப்பூ பிளாக்டிரைவ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  1. உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
  2. முதல் மாநாடு 1997 – சிங்கப்பூர்
  3. 2வது – 1999 சென்னை
  4. 14வது – 215 சிங்கப்பூர்
  5. 14 இணைய மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
  6. மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
  7. தமிழ்க் கணிமைக்கான வளர்ச்சித் திட்டங்கள் முன்னாக்கப்படுகின்றன.

 

Scroll to Top