4.தமிழகத்தில் பகுத்தறிவு, திராவிட இயக்கங்களின் வளர்ச்சி - தமிழகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் பங்கு
. தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை எழுதவும்.
தமிழ் மறுமலர்ச்சி
அச்சு இயந்திரத்தின் அறிமுகம்
திராவிட மொழிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட மொழியியல் ஆய்வுகள் தமிழ் மறுமலர்ச்சிக்கு காரணமாயின.
அச்சுத் தொழில் நுட்பத்தின் வருகை
- ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து அச்சில் ஏறிய முதுல் மொழி – தமிழ்
- 1578 – தம்பிரான் வணக்கம் எனும் நூல் கோவையில் வெளியிடப்பட்டது.
- 1709 – முழமையான அச்சகம் சீகன் பால்கு என்பவரால் தரங்கம் பாடியில் நிறுவப்பட்டது.
- 1812-திருக்குறள் புத்தகம் வெளியிடப்பட்டது.
பதிப்பிக்கப்பட்ட தமிழ் செவ்வியல் இலக்கியங்கள்
- சி.வை. தாமேதரனார் – பனையோலைகளில் கையால் எழுதப்பட்ட பல தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பதிப்பித்தார். தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை, சூளாமணி போன்றவை.
- உ.வே.சாமிநாதர் பதிப்பித்தவை – சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை, மணிமேகலை, ஐங்குநுறூறு, பதிற்றுப்பத்து
- பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது தமிழ் மக்களின் வரலாறு, மரபு, மொழி, இலக்கியம், சமயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
கோட்பாடுகள்
- W எல்லிஸ் – தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட குடும்பத்தை சார்ந்தவை. அவை இந்தோ ஆகிய மொழிகளோடு தொடர்பில்லாதவை.
- ராபர்ட்கால்டுவெல் – திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் தமிழ் திராவிட மொழிகளுடன் நெருக்கமான தொடர்பு உள்ளது. ஆனால் சமஸ்கிருத்துடன் ஒப்பு இல்லை.
- பி.சுந்தரனார் – மனோன்மணியம் நூலில் தமிழ் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டுள்ளது.
- தமிழ் நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர, தமிழ் மறுமலர்ச்சி வித்திட்டது.
ஆபிரகாம் பண்டிதர் – தமிழ் இசைக்குச் சிறப்பு செய்ததோடு, தமிழ் இசை வரலாறு குறித்த நூல்களையும் வெளியிட்டார்.
பரிதிமாற் கலைஞர்
- தமிழின் மீது சமஸ்கிருதம் கொண்டிருந்த, செல்வாக்கை கண்டுபிடித்தார்.
- இயற்பெயர் – சூரிய நாராயண சாஸ்திரி
- தமிழை செம்மொழி என்றார்.
- சென்னை பல்கலைக்கழகம் வட்டார மொழி என தமிழை அழைத்த கூடாது என்றார்.
- 14 வரிச்செய்யுள் வடிவத்தை அறிமுகம் செய்தார்.
மறைமலை அடிகள்
- இயற்பெயர் – வேதாச்சலம்
- தனித்தமிழ் இயக்கம் உருவாக்கினார்.
- விளக்க உரை – பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு
- பணிபுரிந்த பத்திரிக்கை – சித்தாந்த தீபிகா
- பிரமணரல்லாதோர் இயக்கத்தில் பங்கு பெற்றார்.
- ஒரே கடவுள் கொள்கை – சுயமரியாதை இயக்கத்தில் முதலில் இருந்தார் பகுத்தறிவாளர்
தனித்தமிழ் இயக்கம் – 1916
நோக்கங்கள்:
- தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துதல்
- சமஸ்கிருதத்தின் செல்வாக்கை தமிழ்மொழியிலிருந்து அகற்றுதல்
- தமிழ் மொழி மீது தாக்கம் செலுத்தும் வேற்றுமொழி வார்த்தைகளை அகற்றுதல்
துவக்கியவர்
- தூய்மை வாதத்தின் தந்தை மறைமலை அடிகள்
- முக்கிய பங்கு வகித்தவர் – நீலாம்பிகை
செயல்பாடுகள்:
- வேதாச்சலம் – மறைமலை அடிகள் (பெயர்)
- ஞான சாகரம் – அறிவுக்கடல் (பத்திரிக்கை)
- சமரச சன்மார்க்க சங்கம் – பொதுநிலைக்கழகம் என மாற்றம்
- தமிழ் சொற்களுக்குள் புகுந்து விட்ட சமஸ்கிருதச் சொற்களுக்கு இணையாகப் பொருள் தரக்கூடிய தமிழ் சொற்கள் அடங்கிய அகராதி ஒன்றை நீலாம்பிகை தொகுத்தார்.
- இவ்வியக்கம் தமிழ் சமூகத்திலிருந்த பிரமணிய (ம) சமஸ்கிருத மரபுகளை எதிர்கொண்ட சமூக இயக்கங்களுக்கு வழி வகுத்தது.
- நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின் புலத்தை விளக்கி, சமூக நீதிக்கான அதன் பங்களிப்பைச் சுட்டி காட்டவும்
தோற்றம்:
- 1909 – மதராஸ் பிரமணரல்லாதோர் சங்கம் – சுப்பிரமணியம், புருஷோத்தமன்
- 1912 – மதராஸ் ஐக்கிய கழகம் – C. நடேசனார்
- 1916 – திராவிடர் இல்லம் நிறுவப்பட்டது. – C. நடேசனார்
- பிராமணரல்லாதோர் பட்டதாரிகளுக்கு உதவுவது, கற்கவைப்பது நோக்கம்
பின்புலம்
- பிரமணரல்லாதோர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1916 நவம்பர் 20ல் உருவாக்கப்பட்டது.
- உருவாக்கியவர்கள் – நடேசனார், T.M. நாயர், தியாகராய செட்டியார், அலமேலுமங்கை, தாயரம்மாள்.
- கொள்கையை பரப்ப பத்திரிக்கைகள் – திராவிடன், ஜஸ்டிஸ், ஆந்திர பிரகாசிகா
- 1920 நீதிக்கட்சி என மாற்றம்
- 1920 – தேர்தலில் வெற்றி பெற்ற சுப்புராயலு முதல் அமைச்சராக பொறுப்பேற்றார்.
சமூக நீதி பங்களிப்பு:
- பிராமணர் அல்லாதவர்களுக்கு ஆதரவாக இறங்கியது
- மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு கல்வி, வேலைவாய்ப்பை வழங்கியது
- சாதி மறுப்பு திருமணத்திற்கு தடையாக இருந்த சட்டசிக்கல்களை நீக்கியது
- பொது இடங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுத்தது
- 1921ல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதன் முதலாக கொண்டு வந்தது.
- 1924 ல் பணியாளர் தேர்வு வாரியத்தை அறிமுகப்படுத்தி, இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்தியது
- 1926 ல் இந்து அறிநிலையத்துறைச் சட்டத்தை கொண்டு வந்து, கோவில் நிர்வாகத்தை நிர்வகிக்க வழி செய்தது.
- ஏழை எளிய மக்களுக்கு வீடுகட்ட இலவச மனைப்பட்டாக்கள் வழங்கியது.
- தேவதாசி முறையை ஒழித்தது
- மதிய உணவுத்திட்டம் சென்னையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
- வகுப்புவாரி ஆணையம் 1921, 1922 ல் வெளியிடப்பட்டன.
- தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா. பெரியாரின் தீர்மான கரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.
ஈ.வெ.ரா. பெரியார்
- ஈரோட்டைச் சார்ந்தவர்
- ஆரம்ப காலத்தில் இந்து மதப்பற்றாளராக இருந்து வெறுத்து பின் காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.
- காங்கிரஸ் கட்சியில் பிராமணர்களின் ஆதிக்கத்தை வெறுத்து, 1925ல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.
பெரியாரின் பங்களிப்பு:
- பகுத்தறிவுக் கருத்துக்களை மக்களிடையே பரப்பினார்.
- குடியரசு, ரிவோல்ட், புரட்சி பகுத்தறிவு விடுதலை பத்திரிக்கைகள்
- பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து, இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்.
- ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தினார்.
- கேரளா -வைக்கம் கோவில் நுழைவு போராட்டம்
- மது குடிப்பதை தவிர்க்க தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களை வெட்டினார்.
- கோவில்களில் நிலவிய பரம்பரை அர்ச்சகர் முறையை எதிர்த்து அனைத்து நபர்களும் அர்ச்சகர் ஆகலாம் என வாதிட்டவர்.
- சுயமரியாதை திருமணங்களை பரிந்துரைத்தவர்.
- சேரன்மகாதேவி குலப் பள்ளியில் நடைபெற்ற சாதி வேறுபாடுகளை களைய முற்பட்டவர்.
- சமயம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்
- குலக்கல்வி திட்டத்தை எதிர்த்தார்
பெரியார் ஒரு பெண்ணியவாதி
- பெரியார் ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்தார்.
- குழந்தை திருமணம், தேவதாசி முறையை எதிர்த்தார்.
- பெண்களின் மோசமான நிலைக்கு குரல் கொடுத்தார்.
- பெண்ணியம் குறித்து ‘பெண் ஏன் அடிமையாளாள்” என்ற நூலை எழுதினார்.
- பெண்கள் விவாகரத்து பெறவும் சொத்தில் பங்கு பெறவும் உரிமை உண்டு என்றார்.
- திருமணம் செய்து கொடுப்பது எனும் வார்த்தையை தவிர்த்து, வாழ்க்கைத்துணை என்று பயன்படுத்த வேண்டினார்.
- குடும்பக்கட்டுப்பாடு, கருத்தடையை ஆதரித்தார்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கம்
- தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மேம்பாட்டிற்கான திட்டம்
- சடங்குகளும் சம்பிராதயங்களும் இல்லாத சாதிகளற்ற பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடற்ற ஒரு சமூகத்தை இவ்வியக்கம் ஆதரித்தது.
- பகுத்தறிவு, சுயமரியாதை அடிப்படை
- பெண்களின் தாழ்வு நிலைக்கு காரணம் எழுத்தறிவின்மை என்றார்.
- அனைருக்கும் கட்டாய தொடக்கக் கல்வியை வழங்க பாடுபட்டது.
- சமூக மூடநம்பிக்கைகளை எதிர்த்தது.
- பெண்களின் விடுதலைக்கு பாடுபட்டது.
- பிராமணரல்லாத இந்துக்கள், இஸ்லாமியர்களின் நலனுக்காக போராடியது.
- திராவிட இனம் என்ற சிந்தனையை வளர்த்தது.
- இஸ்லாமின் மேன்மை மிகு கோட்பாடுகளை (சமத்துவம், சகோதரத்துவம்) பாராட்டியது.
- இந்திய விடுதலைக்கு முன்பு மொழிப் போராட்டம் பற்றி கூறுக.
மொழி
- மொழி என்பது அடையாளத்தின் வலிமையான குறியீடு
- இது ஒரு சமூகத்தின் பண்பாடு (ம) உணர்களுடன் இயைந்து நிற்பது
- மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கம் பொரியாரின் எழுத்து சீர்திருத்தம் ஆபிராகம் பண்டிதரின் தமிழிசை இயக்கம் தமிழ் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது.
ஆபிரகாம் பண்டிதர்
- தமிழர் இசை முறையை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றார்.
- 1912 தஞ்சாவூர் சங்கீத வித்யா மகாஜன சங்கம்
- 1943 – முதல் தமிழிசை மாநாடு
இந்தி எதிர்ப்பு போராட்டம் – 1937-39
- தமிழ் நாட்டில் வெவ்வேறு காலப் பகுதிகளில் இந்திமொழி கட்டாய மொழியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
- இது தமிழ் மொழிக்கும் பண்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக கருதப்பட்டது.
- சென்னை மாகாண முதல்வராக இருந்த இராஜாஜி அவர்கள் இந்தி மொழியை பள்ளிகளில் கட்டாயமாக்கினார்.
- இதனால் சென்னை மாகாணத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
- இது திராவிடர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் செயல் என பெரியார் தெரிவித்தார்.
- தமிழ்மொழி மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும் என மறைமலை அடிகள் எச்சரித்தார்.
- இது பிராமணர்களின் ஆதிக்கத்தையும், சமஸ்கிருதமொழியின் ஆதிக்கத்தையும் தோற்றுவிக்கும் என தமிழ் ஆர்வலர்கள் கண்டித்தனர்.
- நாடு முழுவதும் பெரிவாரியான மக்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள் நடத்தின.
- இரயில் மறிப்பு போராட்டங்கள் அதிகம் நடந்தன.
- கல்லூரி மாணவர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் தீவிரமாக பங்காற்றியோர்
- நீதிக்கட்சி A.T. பன்னீர் செல்வம்
- தாளமுத்து நடராஜன்
- கி.ஆ.பொ. விசுவநாதம்
- மறைமலை அடிகள்
- பாரதிதாசன்
- தமிழநாட்டில் பெண்கள் இயக்கங்கள் பற்றி எழுதுக.
- இந்தியப் பெண்கள் சங்கம் – 1917
- அகில இந்தியப் பெண்கள் மாாநாடு – 1927
- இந்தியப் பெண்கள் சங்கம் – 1917 (அடையாறு)
- துவக்கியோர் – அன்னிபெசன்ட், டோரதி ஜின ராஜதரசா, மார்கரெட் கசின்ஸ்
- சென்னை (அடையாறு) – இடம்
- பணிகள் – தனிநபர் சுகாதாரம், திருமணச்சட்டங்கள், வாக்குரிமை, குழந்தை வளர்ப்பு, பொது வாழ்வில் பெண்களின் பங்கு பற்றிய பல்வேறு மொழிகளில் துண்டு பிரசுரம் (ம) செய்தி மடல்களை வெளியிட்டது.
- அகில இந்திய பெண்கள் மாநாடு – 1927
- இந்தியப் பெண்கள் சங்கம், பெண் கல்வி குறித்த பிரச்சனைகளை கையாள மாநாட்டை நிறுவியது
- அரசு பெண்களின் மேம்பாட்டிற்காக பலகொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றது.
- சுயமரியாதை இயக்கம்
- இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று பெண்களின் விடுதலையாகும்.
- இதில் பாலின சமத்துவம், பாலினம் குறித்த சமூகத்தின் உணர்வுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காகப் பணியாற்றினர்.
- முக்கியமானோர்
- முத்துலட்சுமி அம்மையார்
- நாகம்மை
- கண்ணம்மா
- நீலாவதி
- மூவலூர் இராமாமிர்தம்
- ருக்மணி அம்மாள்
- அலமேலு மங்கை தாயாரம்மாள்
- நீலாம்பிகை
- சிவகாமி சிதம்பரனார்
- தேவதாசி முறை ஒழிப்பு முத்துலட்சுமி ரெட்டி
- கடவுளுக்கு இறைப்பணி செய்ய, இளம் பெண்களை கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது.
- நாளடைவில் இம்முறை பெரும் ஒழிக்ககேட்டிற்கு வித்திட்டது.
- 1930- சென்னை சட்டமன்றத்தில் மூத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு மசோதாவை அறிமுகப்படுத்தினர்.
- மதராஸ் தேவதாசி சட்டம் – 1947 அரசு இயற்றியது
- தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள் பற்றி எழுதுக.
- இயக்கம் தோன்ற காரணங்கள்
- இந்தியாவில் தொழில்கள் வளர முதல் உலகப்போர் காரணமானது
- தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியது.
- போர் முடிவடைந்ததும் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆட்குறைப்பு நடைபெற்றது.
- முக்கியமானோர்
- சிங்கார வேலர்
- பிபி வாடியா
- திரு.வி. கல்யாண சுந்தரனார்
III. சென்னை தொழிலாளர் சங்கம்
- 1918 ல் இந்தியாவின் முதல் தொழில் சங்கமாக உருவானது
- அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் நாடு 1920 அக்டோபர் 30ல் நடைபெற்றது.
- முக்கிய கோரிக்கைகள்
- தொழிலாளர்களின் பிரச்சனையில் காவல்துறை தலையீடு தவிர்க்க வேண்டும்.
- வேலையில்லாதவர்களுக்கான ஒரு பதிவேட்டை பராமரிக்க வேண்டும்.
- காயமடைந்தோர்க்கு இழப்பீடு வழங்குதல்
- உடல் நலக்காப்பீடு செய்தல் போன்றவை
- தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் வழங்குதல்
- சிங்கார வேலரின் பங்களிப்பு
- சென்னை தொழிலாளர் சங்கத்தின் முன்னோடி
- 1923-முதல் மே தின விழாவை ஏற்பாடு செய்தார்.
- தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளை வெளிப்படுத்த தொழிலாளன் என்ற பத்திரிக்கையை வெளியிட்டார்.
- சுயமரியாதை இயக்கத்தில் பங்குபெற்றார்.
- இந்திய பொதுவுடைமை கட்சியின் ஆரம்பகால தலைவரிகளில் ஒருவர்
- பௌத்தத்தை பரிந்துரைத்தார்.
- இரட்டைமலை சீனிசாவன் (ம) மயிலை சின்னதம்பி ராஜா பற்றி எழுதுக.
இரட்டை மலை சீனிவாசன்: 1859-1945
- தாத்தா என அறியப்பட்டவர்
- பிறப்பு – காஞ்சிபுரம்
- ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி, சமத்துவம், சமூக உரிமைகள் ஆகியவற்றிற்காகப் போராடினார்.
- தன்னலமற்ற சேவைக்காக பெற்ற பட்டங்கள் ராவ்சாகிப், ராவ்பகதூர், திவான் பகதூர்
- இவரது முதல் சுயசரிதை 1939 ல் வெளியிடப்பட்டது. ஜீவிய சரித சுருக்கம்
- 1893 – ஆதிதிராவிட மகாஜன சபை என்ற அமைப்பை உருவாக்கினார்.
- தலைவராக பணியாற்றிய அமைப்புகள்
- ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டமைப்பு
- சென்னை மாகாண ஒடுக்கப்பட்டவகுப்பாரின் கூட்டமைப்பு
- தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளைச் சந்தித்த சீனிவாசன் அவருடன் நெருக்கமானார்.
- 1923 – சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரானார்.
- இலண்டனில் நடைபெற்ற முதல், இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் பங்குபெற்றார்.
- 1932 பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் இவரும் ஒருவராவார்.
மயிலை சின்னதம்பி ராஜா: 1833 1943
- ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவர்
- இவர் ஒரு ஆசிரியர்
- நீதிக்கட்சியை உருவாக்கியவர்களுள் ஒருவர்
- சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்ட மேலவைக்கு முதலில் தேர்வானவர்.
- 1920 – 26ல் சென்னை சட்டசபையில் நீதிக்கட்சியின் துணைத்தலைவராக செயல்பட்டவர்.
பங்களிப்பு:
- தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டார்
- பொது நீர்நிலைகள், பாதைகள் முதல் இடுகாடு வரைப் பயன்படுத்தும் உரிமை ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கும் கோரினார்.
- ஆதிதிராவிடர், ஆதி அத்திரர் வார்த்தைகளை பயன்படுத்த கோரினார்.
- 1928-அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.
- தனித்தொகுதியை கோரிய இவர் பூனா ஒப்பந்தத்திற்குப் பின் கூட்டுத்தொகுதி முறையை ஆதரித்தார்.
- தாழ்த்தப்பட்டோருக்கான தமிழ்நாட்டில் போராடியவர்கள் / தோற்றம் வளர்ச்சி
பெண்கள்
- பெரியார் 1. பெரியார்
- அயோத்தி தாசர் 2. பாரதியார்
- இரட்டை மலை சீனிவாசன் 3. பாரதிதாசன்
- மயிலை சின்னதம்பி ராஜா 4.திரு.வி.க.
- பாரதியார் 5. வள்ளலார்
- C.N. முதலியார்
- எஸ். லட்சுமண ஐயர்
