3.சங்க காலம் முதல் இன்று வரையிலான தமிழகத்தின் சமூக பொருளாதார வரலாறு

  1. பழந்தமிழரின் நம்பிக்கைகள் பற்றி விவரி.

பழந்தமிழரின் நம்பிக்கைகள்

ஊழ்

  1. ஊழ் என்னும் வினைப்பயனை மக்கள் மதித்தனர்.
  2. ஊழ் முற்பிறப்பில் செய்த வினைப்பயனாகும்
  3. அடுத்த பிறவியும் இவ்வினைப்பயன் காரணமாக அமையும் என நம்பினர்.
  4. கோள் பற்றிய நம்பிக்கை
  5. அகநானூறு (86, 136): திங்களும் ஊரோகினியும் கூடிய நன்னாளில் திருமணம் செய்யப்பட்டது.
  6. தொல்காப்பியம்: குடைநாட்கோள், வாள் நாட்கோள் பற்றி குறிப்பிடுகிறது.
  7. பல்லி பற்றிய நம்பிக்கை
  8. தலைவனை பிரிந்த தலைவிக்கு பல்லியின் குரல் – நல்ல அறிகுறியாகும்
  9. யானையின் மேல் செல்லும் மன்னர் பல்லி சொல் கேட்டு பின் வாங்கினார் என அகநானூறு குறிப்பிடுகிறது.
  10. பறவைகள் பற்றிய நம்பிக்கை
  11. குயில் கூவினால் பிரிந்து சென்ற தலைவன் வருவான் நற்றிணை கூற்று
  12. காகம் கரைந்தால் விருந்தினர் வருவர்
  • கரிக்குருவியின் ஒலி இழிவுக்கு அறிகுறி
  1. ஆகுளிபறை – ஆந்தையின் ஒலி உடையது.
  2. நற்சொல் பற்றிய நம்பிக்கை

முதுமகளிர் நாழியில் நெல்லை எடுத்துச்சென்று, சுளகில் இட்டு, நீரும்பூவும் சொரிந்து விரிச்சி கேட்டதாக முல்லைப்பாட்டு குறிப்பிடுகிறது.

  1. உன்னமரம் பற்றிய நம்பிக்கை
  2. உன்னமரம் தழைத்துக் காணப்பட்டால் வெற்றி
  3. உன்னமரம் வாடிக்காணப்பட்டால் தோல்வி என கூறப்பட்டது.
  4. கண், தோள் பற்றிய நம்பிக்கை
  5. ஆண் – வலக்கண், வலத்தோள் துடித்தல் நல்லது
  6. பெண் இடக்கண், இடத்தோள் துடித்தல் நல்லது
  7. கனவு, உற்பாதம் பற்றிய நம்பிக்கை
  8. கண்ணகி கண்ட கனவினால் தீயகாரியங்கள் நிகழ்ந்தது – சிலப்பதிகாரம்
  9. உற்பாதங்கள் – மனதிற்கு ஒவ்வாத செயல்கள் தலைவி தும்பி இசை பாடுதல் விளக்கு ஒளியில்லாமல் போதல் ஆந்தை குழறுதல்.

 

  1. வெள்ளி, மீன் பற்றிய நம்பிக்கை
  2. வடதிசையில் இருப்பின் வளம்
  3. தென்திசையில் தோன்றினால் மழைவளம் தவறாது – கபிலர் கூற்று
  4. எரிகோள் பற்றிய நம்பிக்கை
  5. விண்மீன் தோன்றினால் அரசர்க்கு ஆகாது
  6. விண்மீன் தோன்றிய ஏழாம் நாளில் மாந்தரஞ்சேரல் இரும் பொறை இறந்தான் – புறநானூறு

10.பேய் பற்றிய நம்பிக்கை

  1. பேயினை விரட்ட யாழ் இசைக்கப்பட்டது.
  2. குளம், கடல் போன்ற பகுதிகளில் இருப்பதாக நம்பினர்.
  • குற்றம் செய்பவர்களை பூதம் தண்டிக்கும்
  1. சதுக்க பூதம் – சிலப்பதிகாரம்

 

  1. சங்ககாலத் திருமணச் சடங்குகைள பற்றி எழுதுக.

சங்ககாலத் திருமணச் சடங்குகள்

  1. பொருத்தம் பார்த்தல்
    1. 10 பொருத்தம் பார்க்கப்பட்டது
    2. ‘”பிறப்பேகுடிமை” முதன்மை பொருத்தமாக பார்க்கப்பட்டது.
    3. பரிசளித்தல்

மணப்பெண்ணுக்கு மணமகன் அளிப்பது இத பரியம் எனப்பட்டது.

  1. சங்க இலக்கியம் – அகம் – 86
  1. திங்களும் உரோகினியும் கூடிய நன்னாளில் யாமத்தில் திருமணம் நடந்தது.
  2. புதுமணல் பரப்பி பந்தலிட்டு, நல்ல விளக்கு ஏற்றினர்.
  • உழுத்தம் பருப்பு, செந்நிற பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
  1. அகம் – 136
  2. புட்ச குணம் பார்க்கப்பட்டது.
  3. மணமுழவு ஒலித்தது
  • வெண்ணூலில் வாகை இலையும், அருகம்புல்லையும் சேர்த்து கட்டி, காப்பாக கட்டினர்.
  1. அறியப்படும் செய்திகள்
  2. தாலிகட்டும் முறை இல்லை
  3. மந்திரம் ஓதும் முறை இல்லை
  • தீவலம் வருதல் இல்லை
  1. அம்மி மிதித்தல் இல்லை
  2. சிலப்பதிகாரத்தின் மூலம் அறியப்படுவன
  3. “மாமுது பார்ப்பவன் மறைவழி காட்ட”- கோவலன் கண்ணகி திருமணம் நடந்தது
  4. தாலிகட்டும் முறை கி.பி 10 ம் நூற்றாண்டில் தோன்றியது.

 

  1. சிலம்பு கழித்தல்
  2. சங்க காலத்தில் கன்னிப் பெண்களுக்கு சிலம்பு அடையாளம்
  3. திருமணத்திற்கு முன்பு இது நீக்கப்படும்
  • ஆதாரம் ஐங்குறுநூறு, அகநானூறு
  1. மலரணிதல்
  2. திருமணமாவதற்கு முன் கன்னிப் பெண்கள் மலர் அணிவது இல்லை.
  3. தலைவியின் கூந்தலில் தலைவன் மலர் சூட்டுதல் நடைபெற்றது.
  4. பண்டைய தமிழரின் திருமணமுறையை விளக்குக.

திருமண முறை

பண்டைய தமிழரின் திருமணமுறை களவு, கற்பு வாழ்க்கை என இருவகையாக அமைந்திருந்தது.

களவு வாழ்க்கை

ஆணும் பெண்ணும் ஊரார் அறியும் வகையில் காதல் செய்தல்

  1. உலகியல் வழக்கு

பெரும்பாலும் பெற்றோர் முடித்துவைக்கும் திருமணமும், சிலவே காதல் திருமணம் “ஓத்த குலத்தோர் இடையே மணம்பேசி முடிப்பதே வழக்கம்”

  1. அலர்

வயது ஆணும் பெண்ணும் தாமே உறவு கொண்டு ஒழுகுதலைச் சமூகம் எதிர்த்துள்ளது. ஒருதலைவி தன்னுடைய காதலை அன்னை அறிந்திருந்தால், ஊரில் அவள் வாழ்தலே அரிது என்று வருந்துகிறாள்.

  1. இற்செறிப்பு

ஒரு தாய் கட்டுப்பாடின்றி வெளியிற் செல்லும் தன் மகளைப் பார்த்து, அவள் வந்த பெண் என நினைவுறுத்தி இல்லிலேயே இருக்குமாறு

வயது பணிக்கிறாள்.

  1. உடன்போக்கு

பெற்றோர் அறியின் காதலுக்குத் தடை ஏற்படும் என்றஞ்சிய காதலர் உடன்போக்கில் ஈடுபட்டனர் அப்போது பெற்றோர் அவர்களைத் தேடிச் சென்றதாகப் பல பாடல்கள் கூறுகின்றன.

  1. அறத்தோடு நிற்றல்

தலைவி காதலில் ஈடுபட்டதால் மேனியில் வாட்டமும், போக்கில் மாற்றமும் தோன்றும் போது, அது யாதென அறியாத தாய் வேலனைக் கூவி வெறியாடுகிறாள். அப்போது தலைவியின் காதலை வெளிப்படுத்த வேண்டியது தோழியின் கடமை.

  1. மடலேறுதல்
  2. தம் மகள் காதலில் ஈடுபட்டதை கண்டும், அவளை மணம் செய்து கொடுக்கப் பெற்றோர் மறுக்கின்றனர்.
  3. இதனால் தலைவன் தலைவியின் படத்தையெழுதிக் கையில் கொண்டு, பனைமட்டையால் செய்த மாவின் மீது ஏறி ஊரறியத் தோன்றினான்.
  • இதனால் காதலுக்கு தடை (ம) எதிர்ப்பு இருந்ததை அறியலாம்.

 

கற்பு வாழ்க்கை

தமரறிய, ஊரறியத் திருமணம் செய்துகொண்டு வாழும் வாழ்க்கை

  1. பொருத்தம் பார்த்தல் 1. அகம் 86, 136
  2. பரிசமளித்தல் 2. சிலப்பதிகாரம்
  3. திருமணச்சடங்குகள் 3. அறியப்படும் செய்திகள்
  4. சிலம்பு கழித்தல்
  5. மலரணிதல்
  6. செம்புலப்பெயல்நீர்

“செம்புலப் பெயல் நீராற்”- குறுந்தொகை பாடல் மூலம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்த உறவினர் (ம) சிறு குழுக்களிடையே திருமணம் நடந்ததை அறியலாம்.

  1. மங்கல நீராட்டுதல் – மஞ்சள் தரித்த நீர், பூ, நெல்
  2. வெண்ணூல் சூட்டுதல்
  3. முன்கை பற்றுதல்
  4. புதுச்சோறு சமைத்தல்

 

  1. தமிழர் கண்ட நல்லறம் பற்றி விளக்குக.

(OR)

தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள் யாவை?

(OR)

பழந்தமிழரின் வாழ்வியல் விழுமங்கள் யாவை?

தமிழர் கண்ட நல்லறம்

பண்டைய தமிழர்கள் அறத்தின் மீது பற்று கொண்டவர்கள் இதனைத் தமிழ் இலக்கிய சான்றுகளின் வழி அறியலாம்

  1. இன்பம் கண்டு வாழ்தல்
  2. இன்பத்தினையும் துன்பத்தினையும் கொண்டது மனித வாழ்க்கை
  3. ஓரில்லத்தில் மணம் நடைபெறுகிறது.
  • எதிர்வீட்டில் பிணப்பறை ஒலிக்கிறது.
  1. நிலையில்லா வாழ்வில் இன்பம் கண்டு வாழுதல் என புறநானூறு குறிப்பிடுகிறது.
  2. இன்னா செயய்யாமை
  3. மூப்பும் பிணியும் வருவதற்கு முன்பே நல்லது செய்ய வேண்டும்.
  4. நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல் இருத்தல் வேண்டும் புறநானூறு
  5. பிறருக்கு உதவுதல்
  6. இயலாத நிலையில் உள்ள அனைவருக்கும் உதவுதல்
  7. நம்மால் செய்ய இயலாத காரியத்தை முடியும் என்பதும். செய்ய இயலும் காரியத்தை முடியாது என்பதும் தவறு
  • இச்செயல் ஒருவனது புகழை குறைத்து விடும் – புறநானூறு

 

  1. எண்ணம் உயர்வாதல்
  2. யானைவேடன் தன் நோக்கத்தில் உறுதியாக இருந்தால் யானையை பெறுவான்.
  3. “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” – திருக்குறள்
  4. பண்புடைமை
  5. “பண்புடையார் பட்டுண்டு உலகம்”- திருவள்ளுவர்
  6. மாந்தர்களின் பண்பினால் தான் நாடு சிறக்கும்
  • புகழ் எனில் சான்றோர் உயிரையும் கொடுப்பர். பழி எனில் அதனைக் கண்டு அஞ்சுவர்
  1. “உண்டாலம்ம இவ்வுலகம்” – புறநானூறு உலகம் நிலைபெற சான்றோர்களே காரணம் எனக் குறிப்பிடுகிறது.

6.கொடையறம்

“உண்பது நாழி, உடுப்பது இரண்டே”- புறநானூறு

  1. நட்பறம்
  2. சிலர் வஞ்சக எண்ணத்தால் தன்னுடைய செல்வத்தைப் பதுக்கி வைப்பர் இவர்களுடன் உறவு கொள்வது ஆபத்து
  3. பிசிராந்தையர் -கோப்பெருஞ்சோழன், அதியமான் – ஒளவை
  4. வாழ்க்கையறம்

பிசிராந்தையர் கவலையற்று வாழ கூறும் காரணங்கள்

  1. மனைவி பண்புடையவளாக இருத்தல்
  2. அறிவுடைய பிள்ளைகள்
  • தன் குறிப்பறிந்து செயல்படும் கவலாளிகள்
  1. நல்ல மன்னர் அமைதல்
  2. செய்நன்றி மறவாமை

துன்பகாலத்தில் உதவியவர்களின் நட்பினை ஏழு பிறப்பிலும் மறத்தல் கூடாது – வள்ளுவர்

  1. பிறர் துன்பத்திற்கு அஞ்சுதல்

தன்னைச் சார்ந்தவருக்குத் துன்பம் வருமானால் அதற்கு வருந்தும் உள்ளமே செல்வத்தை விட உயர்ந்தது.

  1. மனம் பற்றிய அறம்
  2. மனம் என்பது ஒருவனது கண்ணாடி போன்றது.
  3. மனம் அறிந்து தீமைச் செய்வது பழிக்கத்தக்கது – கலித்தொகை

12.நல்லறத்திற்கு ஆகாதவை

  1. நட்பு கொண்டு துன்ப நேரத்தில் கைவிடுதல்
  2. ஆசிரியருக்கு ஆகாதவர்
  • விசாரணை இல்லாமல் தண்டித்தல் கூடாது
  1. தீவினைகள் செய்தால் வாழ்க்கை தேய்ந்து போகும்
  2. செல்வம் உள்ள போது உறவு கொள்ளுதல், துன்பம் வரும் போது கைவிடுதல்

 

  1. சங்க இலக்கியத்தில் காணப்படும் அறச்செய்திகளை புலப்படுத்துக.

சங்க இலக்கியத்தில் அறம்

  1. அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை
  2. இப்பிறப்பில் அறம் செய்தால், அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என வணிக நோக்குக் கூடாது
  3. இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
  4. அறவிலை வணிகன் ஆஅய்அல்லன்”- புறம்
  5. அதாவது நோக்கமின்றி அறம் செய்வதே மேன்மை தரும் என உணர்த்தப்பட்டுள்ளது.
  6. அரசியல் அறம்
  7. “அன்நெறி பிழையாத் திறனறி மன்னர்” மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்தின் குறியீடுகளாப் போற்றப்பட்டன.
  8. அரசன் செங்கோல் போன்று நேரிய ஆட்சிபுரிய வேண்டும் என பல பாடல்களில் கூறப்பட்டுள்ளது.
  • நீர்நிலை பெருக்கி, நிலவளம் கண்டு, உணவுப் பெருக்கம் காண்பது அரசனின் கடமை
  1. குற்றங்களை அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும்.
  2. நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்கிறது மதுரைக்காஞ்சி
  3. அறங்கூறவையம்
  4. அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.
  5. உறையூரிலிருந்த அற அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.
  • மதுரையிலிருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி பேசுகிறது. இது துலாக்கோல் போன்று நடுநிலைமிக்கது.
  1. போர் அறம்
  2. விரமற்றோர் புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.
  3. பசு, பார்ப்பனர், பெண்கள், நோயுற்றவர், புதல்வரைப் பெறாவதர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரியப்பட்டதாக புறநானூறு பாடல் குறிப்பிடுகிறது.
  • எறியார் எறிதல் யாவணது எறிந்தார்
    எதிர்சென்று எறிதலும் செல்லான் – புறம்
  1. கொடையறம்
  2. தன் மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் மகிழ்ச்சி
  3. “செல்வத்தின் பயனே ஈதல்” மதுரைக் கணக்காயனார் மகனார் என்றார் நக்கீரனார்
  • கடையேழு வள்ளல்களின் பெருமை சிறுபாணாற்றுப் படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  1. பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப் பதிவாகவே உள்ளது.
  2. புறநானூறும் கொடைப்பதிவை குறிப்பிடுகிறது.
  3. அரியன என்று கருதாது, தயங்காது கொடுத்தாலும் ஈதலால் வரும் இழப்புக்கு வருந்தாமையும் நாள்தோறும் கொடுத்தலும் கொடைப்பெருமைகளாகப் பேசப்படுகின்றன.
  • உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார் ஔவையார்
  • இரவலர் வராவிட்டாலும் அவர்களைத்தேடி வரவழைத்தல் கோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்கிறார் நச்செள்ளையார்

6.உதவியறம்

  1. “பிறர்நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல்
    சான்றவர்க்கு எல்லாம் கடன்”
  2. உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம்
    தீர்ப்பதுதான் என்கிறார் நல்வேட்டனார்.
  • உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவு அழியும்என பெருங்கடுங்கோ குறிப்பிடுகிறார்
  1. செல்வம் என்பது சிந்தையின் நிறைவு என்கிறது தமிழ் இலக்கியம்
  2. வாய்மையறம்
  3. வாய்மை பேசும் நாவே உண்மையான நாவு என்பதை “பொய்யாச் செந்தர்’ என இலக்கியங்கள் கூறுகின்றன.
  4. “பிழையா நன்மொழி”என வாய்மையை நற்றிணை குறிப்பிடுகிறது. பொய்மையை “பொய்மொழிக் கொடுஞ்சொல்” என்கிறது.
  • நிலம் புடைபெயர்ந்தாலும் பொய் சொல்லக்கூடாது என்கிறது சங்க இலக்கியங்கள்
  1. நாக்கு இன்பத்தின் கதவை திறப்பதும் (அ) துன்பத்தின் கதவை திறப்பதும் அதுதான்.

 

 

  1. பழமொழி மூலம் அறியப்படும் செய்திகளை புலப்படுத்துக.

பழமொழி மூலம் அறியப்படும் செய்திகள்

  1. பழமொழிகள் என்பவை மக்கள் அனுபவத்தின் சாறு
  2. ஓர் இனத்தின் பண்பாட்டை உணர்ந்து கொள்ள உதவும் கருவூலங்கள்

தொல்காப்பியம்

நுண்மையும், சுருக்கமும், ஒளியுடைமையும், மென்மையும் விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வருவது பழமொழி.

அறியப்படும் செய்திகள்

  1. திருமணமும் இல்வாழ்வும்
  2. குரங்கானாலும் குலத்திலே கொள்ள வேண்டும்.
  3. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
  4. உறவுமுறை

பழைய கால்வாயை தூர்க்காதே, புதிய கால்வாயை வெட்டாதே

  1. தந்தையின் சிறப்பு
  2. குடும்பத்திற்கு அரசன் தந்தை, அவன் இல்லாத குடும்பம் சீர்கெடும்.
  3. தந்தை எவ்வழி; அவ்வழி புதல்வன்
  4. தாயின் சிறப்பு
  5. தாய்க்கு அடங்காதவன் ஊருக்கு அடங்கான்
  6. பெண்ணிற்கு தாய் இருக்கும் வரையில்தான் பிறந்தவீட்டு சிறப்புக் கிட்டும்
  7. மக்கட்பேறு
  8. ஆசைக்கொடு பெண்ணும், ஆஸ்திக்கொரு ஆணும்
  9. பிள்ளையில்லா செல்வம் பாழ்.
  10. பிள்ளை வளர்ப்பு
  11. ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது
  12. அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் பயன்படா.
  13. கூட்டு வாழ்வு

கூடி வாழந்தால் கோடி இன்பம்

  1. கடவுளும் விதியும்
  2. வினை விதைத்தவன் வினை அறுப்பான்
  3. பட்டகாலிலே படும், கெட்டகுடியே கெடும்
  4. தகுதியறிந்து வாழ்வு – விலுக்கேற்ற வீக்கம்
  5. குணமும் பணமும் – பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
  6. உழைப்பும் உயர்வும் – ஏர் நடந்தால் பேர் நடக்கும்
  7. பெண்ணின் நிலை

பெண்ணென்றால் பேயும் இரங்கும் – தாய் தெய்வம்

 

 

  1. நாட்டுப்புற இலக்கியம் (அ) வாய்மொழி இலக்கியம் மூலம் அறியப்படும் செய்திகளை புலப்படுத்துக.

நாட்டுப்புற இலக்கியம்

  1. உண்மைகளைஅப்பட்டமாக வெளியிடும்
  2. மக்களின் சமூக, பொருளாதார, சமய வரலாற்றை அறிய உதவும்
  3. குழந்தையின் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள அனைத்து நிலைகளையும் சுட்டிகாட்டுகின்றன.

அறியப்படும் செய்திகள்

  1. குழந்தைப்பேறு
  2. “ஊருக்குப் போகையிலே

உடன் வரப்பிள்ளை இல்லை”

ஒரு பெண் மகப்பேறு இல்லாமைகண்டு வருந்தும் பாடல்

  1. குழந்தை இல்லாத பெண்கள் வருந்துவதும், அதற்காக தானம் தர்மம் செய்வதும் குழந்தையை மகிழ்ச்சியுடன் வர்ணித்தலும் உண்டும்.
  2. குடும்பம்

திருமணம் செய்து வைப்பதும். குடும்பங்களில் நடக்கும் அனைத்து நல்ல, கெட்ட, விஷயங்களில் கலந்துகொள்ளுவதும் மரபு.

  1. காதல் பாடல்

“செத்து மடிஞ்சாலும் செலவழிஞ்சு போனாலும் செத்த இடந்தனிலே” போன்ற காதல் உணர்ச்சிகள் இடம் பெறும்.

  1. குடிகாரனுக்கு அறிவுரை

“சிகரெட் புக்காதீங்க

சின்னபுள்ள ஆகாதீங்க

மெத்த குடியாதிங்க….

5.ஒப்பாரி

  1. மானிட வாழ்வின் ஆழத்தையும் எழுத்தத்தையும் காட்டும்
  2. வாழ்வின் முடிவு சாவு
  • பிள்ளையில்லாக்குறை, மாமியார் – நாத்தனார், கொடுமை, காதல் தோல்வி, ஏமாற்றம் என அனைத்தும் ஒப்பாரியில் உள்ளன.

6.தாலாட்டு

  1. எதுகை, மோனை ஓசை நயம் இருக்கும்
  2. வட்டார சிறப்பியல்பு, சமூகநிலையை கொண்டு இருக்கும்.
  • நகரத்தார் பாடல்களில் செல்வவளம் காணப்படும்
  1. ஏழை மக்களிடம் தம் குழந்தைகள் எதிர்காலம்ட பற்றிய உணர்வுக்ள நிறைந்திருக்கும்

தாலாட்டுபாடல்

“தொட்டிலுக்குக் கீழாக என் கண்ணே உனக்குத் துணையிருப்பாள் மீனாட்சி

கட்டிலுக்குக் கீழாக என் கண்ணே காத்திருப்பார் சொக்கலிங்கம்”

  1. மணமுறிவு
  2. தெய்வ வணக்கம்

தேவதைகளை வேண்டும் பாடல்கள், பூசாரிப்பாட்டு

9.நல்வாழ்வுக்கான அறிவுரைகள்

பொன்மொழி தாங்கிய நாட்டுப் பாடல்கள் பல உண்டு.

10.பல்வகைப்பாடல்கள்

விளையாட்டு தொழில், பஞ்சம், கொள்ளை என பல பாடல்கள் உள்ளன.

 

  1. சங்ககாலத் தமிழரின் இறப்புகாலச் சடங்குகளை புலப்படுத்துக.

இறப்பு காலச் சடங்குகள்

  1. பாடை கட்டல்
  2. சங்கநாளில் இறந்தவர் உடல் பாடையில் கிடத்திச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அப்பாடையினைக் கால்கழிக்கபடில் என அழைத்தனர்.
  3. கள்ளிச் செடிகள் நிறைந்த களர்நிலம் சுடுகாடு ‘வெள்ளில் சொல் பாடையைக் குறிக்கும்.
  4. வெள்ளறுவை போர்த்தல்

அக்காலத்தில் வீரர்கள் இறந்தபோது, தூய வெள்ளாடை போர்த்தினார்கள். இன்று பிணத்தின் மீது போர்த்தப்படுவது கோடித்துணி எனப்படுகிறது.

  1. மாரடித்துப் புலம்பல்

இறந்தோரின் உரிமை மகளிர், பிறமகளிர், கைவளையல்கள் சிதறுமாறு, தம் மார்பகங்களில் அறைந்து புலம்பி அழுவது அன்றைய மரபாகும்.

  1. சாப்பறை முழக்கல்
  2. ஒரில்லத்தில் மண இசை, மற்றோர் வீட்டில் சாப்பறை கேட்டதாக பக்குடுக்கை நன்கணியன் குறிப்பிடுகிறார்.
  3. உலகைப் படைத்தவனைப் பண்பில்லாதவன் என்கிறார்.
  4. ஈமப் பெருங்காடு
  5. பிணம் அழும் சுடுகாடு ஈமப் பெருங்காடு முதுகாடு எனப்பட்டது.
  6. பேய்கள் ஆடின, அந்தைகள், கழுகுகள் வட்டமிட்டன.
  • பிணத்தைச் சுடுபவன் – புலையன்
  1. தருப்பைப்புல், சோற்றுருண்டை படைத்தல் முதலியவற்றை புலையனே செய்தான்.
  2. தாழியிற் கவித்தல்

இடுதல், சுடுதல் இரண்டு மரபுகள் அன்று ஒரு சேர இருந்தன. தாழியிற் இடுதலைக் கவித்தல் என்பர்.

  1. நடுகல்
  2. போரில் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் இடப்பட்டன.
  3. நடுகற்களுக்கு மாலைகள், மயிற்பீலிகள் கட்டப்பட்டன.
  • வெட்சித்திணை காட்சி – மாடுகள் கைப்பற்றும் முயற்சியில் இறந்தவர்களுக்கு
  1. கரந்தை காட்சி – உயிர்நீத்த மீட்பு வீரர்கள்
  2. வாள் போழ்ந்தடக்கல்
  3. மன்னர் குடியில் பிறந்தவர்கள், நோய் வாய்ப்பட்டு இறந்தால் சுவர்க்கம் கிடைக்காது
  4. சுவர்க்கம் பெற உடம்பைத் தருப்பைப் புல்லில் கிடைத்தல்
  • அந்தணர்கள் சடங்குகள் செய்தல்
  1. உடலை வாளால் கீறிப் புதைப்பர்
  2. கைம்மை நோன்பு
  3. கணவனை இழந்த உரிமை மகளிர் விதவைக் கோலம் புரிதல்
  4. சோழற் கரிகாற் பெருவளர்த்தான் இறந்தபோது அவன் மனைவி கைம்மை நோன்பு மேற்கொண்டார்.
  • பூதப்பாண்டியன் பெருந்தேவி கைம்மைநோன்பு மேற்கொண்டார்.
  1. வெள்ளரிக்காய் விதை, நெய் தீண்டாத இலை, கையால் பிழிந்த தீர்ச்சோறு, எள் புளி கூட்டிச் சேர்த்த உருண்டை உணவை உண்டனர்.
  2. சிறு கற்களாலான படுக்கையில் படுத்தனர்.

 

10.தீப்பாய்தல்

  1. பூதப்பாண்டியன் இறந்த போது, அவனது மனைவி உடன்கட்டை ஏறினார்.
  2. சான்றோர் தடுத்தும் கேட்கவில்லை
  • தன் கணவனின் சிறிது நேரப் பிரிவும், மிகுந்த துயரைத்தரும்
  1. நிரந்தரப் பிரிவை விட இறப்பதே மேல் என்றார்

11.தென்புலத்தார் கடன்

  1. இறந்தவர்கட்கு அவர்களுடைய மகன் செய்யும் கடமை
  2. கடன், பிதிர்க்கடன், ஈமக்கடன் – ஆண் மகனுக்கு உரியது.
  • உலகில் புகழ்பெறவும், மறுமைப்பயன் அடையவும் உதவுபவர் ஆண்மக்கள் என நம்பினர்.

 

  1. சங்ககாலப் போர் நெறிகள் பற்றி எழுதுக.

சங்ககாலப் போர் நெறிகள்

  1. பகைவரது ஆநிரைகளை கவர்ந்து வருவர் அவ்வாறு கவர்ந்து வரும் போது அதற்கு தீங்கு ஏற்படாமல் பாதுகாப்பர்.
  2. கவர்ந்து வந்தவற்றை பிறருக்கும் மன்னன் கொடுத்தான்.
  3. வெற்றிக்குப்பின் மன்னன் சகபோர் வீரர்களுடன் பெருஞ்சோறு, கள் உண்டான்.
  4. போர் தொடங்கும் போதும், முடியும் போதும் போர் முரசு அறிவிக்கப்படும்.
  5. முற்றுகையிட்டு போர் புரிவது மன்னருக்கு உரிய கால அவகாசத்தை தந்தது.
  6. அவ்வாறு முற்றுகையிடும் போது, உள்ளிருக்கும் மக்கள் வருந்தும்படி, நீண்டகாலம் போர் புரியக்கூடாது.
  7. கணவனை இழந்தோர், பெண்கள், பார்ப்பனர், ஈமக்கடன் செய்ய வேண்டியவர் ஆகியோரை தாக்குவதில்லை.
  8. ஒரு குழுவினர் மட்டும் தாமாக முன்வந்து அரசரை காப்பது கடமை
  9. படைக்கலன் நழுவவிட்டவர்களை தாக்கக்கூடாது
  10. குழந்தை இறந்து பிறப்பினும் உடலை வாளால் கீறி பின் புதைத்தனர்.
  11. போரில் இறந்தவனுக்கு நடுகல் வழிபாடு நடத்தப்பட்டது.
  12. பகை நாட்டினரின் வீரத்தை போற்றினர்.

 

10.சங்ககாலத் தமிழரின் சமய வாழ்வு

சமய வாழ்வு

  1. சமயம் வாழ்க்கை நெறியாக இருந்தது
  2. ஆனால் நிறுவனமாக வளர்ந்து சமூகத்தை ஆட்டிப்படைக்கவில்லை
  3. சைவம் வைணவம்
  1. சிவன், திருமால் வணங்கப்பட்டது.
  2. ஆனால் சைவம், வைணவம் சமயங்கள் அன்று உருவாகவில்லை.
  3. ஆனால் இவை உருவாகக் கோட்பாடுகள் தோன்றின.
  4. சமணம் (ம) பௌத்தம்
    1. சமணம் (ம) பௌத்தம் பரவியிருந்தன.
    2. வைதீகர்கள் அச்சமயங்களை எதிர்த்தனர்
    3. ஆனால் சமயப்போராட்டங்கள் உருவாகவில்லை

iii. பிறசெய்திகள் (இம்மை – மறுமை, சொர்க்கம் – நகரம் துறவு)

  1. இம்மை, மறுமை, சொர்க்கம், நகரம், நிலையாமை, வீடுபேறு, வினைப்பயன்கள் குறித்துச் சிந்தித்தனர்.
  2. துறவு போற்றப்பட்டது.
  3. சிவன், திருமால், முருகன், பலராமன், கொற்றவை, திருமகள் முதலான தெய்வங்கள் அறிமுகமாயிருந்தன.
  4. நடுகல் வழிபாடு
  1. போரில் இறந்த வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் வெற்றிகள் பொறிக்கப்பட்டு நடுகல் இடப்பட்டது.
  2. இதற்கு வேங்கை, கரந்தை மலர் சூட்டினர்.
  3. பலியும் வழிபாடும்
  4. நடுகற்கள் தெய்வமாக வழிபட்டு, பலியிடுதல் மரபாக இருந்தது.
  5. அதனை நன்னீராட்டி, தீபம் எடுத்தனர்.
  6. அதன் புகை தெருக்களில் கமழ்ந்தது
  7. ஆட்டுக்குட்டி பலியிடப்பட்டது. அதன் இரத்தத்தினை அரிசியோடு சேர்த்துத் தூவுவர் – திருமுருகாற்றுப்படை
  8. வெறியாட்டு

மனிதர் மீது தெய்வம் ஏறி வரும் என்பது நம்பிக்கை சங்ககாலத்தில் முருகனோடு தொடர்புடையது ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து

vii. வழிபாடுகள்

1.கடல்தெய்வ வழிபாடு

  1. பரதவர்கள் முழுநிலவு நாளில் மீன்பிடிக்கச் செல்வதில்லை
  2. மீன், இறைச்சி படைத்துக்கடல் தெய்வத்தை வணங்குவர்.
  3. சுறாமீனின் கொம்பினை மணலில் நடுவர்
  4. அதனிடத்தில் தெய்வம் ஏறியதாக நம்பி, மலர் மாலை சூடுவர்.
  5. பனங்கள், நெற்கள் உண்டு விழா எடுப்பர்.

2.முருக வழிபாடு

  1. பழமையான கடவுள் – முருகன்
  2. குறிஞ்சி நிலத்திற்கு உரியது
  3. திருமுருகாற்றுப்படை முருகன் வரலாற்றை கூறுகிறது.

3.கொற்றவை வழிபாடு

  1. கொற்றவை தமிழரின் வெற்றித்தெய்வம்
  2. இது பின்னாளில் சக்தி வழிபாடாக மாறியது

4.சிவபெருமான் (ம) திருமால்

  1. சங்கநூல்களில் சிவன் பெயர் இடம் பெறவில்லை
  2. சிவனின் இயல்புகள் கூறப்பட்டுள்ளன.
  3. மாயோனாகிய திருமால் முல்லைநிலக்கடவுள்
  4. திருமால் பெருமைகள் – பெரும்பாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
  5. இந்திர பழிபாடு
  6. மார்க்கோபோலோ கண்ட பாண்டிய நாட்டின் நிலையைக் குறிப்பிடுக.

மார்க்கோபோலோ குறிப்புகள்

  1. மாட்டிறைச்சி : கொல்லமாட்டார்கள், சிலர் இறந்த பின்பு உண்டனர்.
  2. தரையிலமர்தல் : சாணம் கொண்டு மொழுகல், மண்ணிலே நாம் பிறந்து மண்ணிலே மடிகிறோம்
  3. ஆடை – ஆபரணம் : ஆடை எளியது அனைவரும் ஒரு சிறிய துணி மன்னன் கழுத்தில் விலை உயர்ந்த ஆபரண மாலை
  4. நீர் : தினசரி இருமுறைகுளியல் உணவு வண்ண வலதுகை உதட்டில் படாவண்ணம் குவளையில் நீர் அருந்தினர்.
  5. உறக்கம் : மக்கள் தெருவில் (அ) தொங்கவிடப்பட்ட கட்டிலில் தூங்கினர்.
  6. மது : மது அருந்துதல் பாவம், அவருடைய சாட்சி ஏற்கப்பட்டது.
  7. பெண்கள் : உயர்ந்த நிலை, ஆணுக்கு நிகராக வேலை, உயர்கல்வி கற்றனர்.
  8. திருமணம் : மார்கழி நோன்பு, தீவலம், அம்மி மிதித்தல்
  9. தேவரடியார் : தேவரடியார் கோவில்களில் பணிபுரிந்து நடனமாடினர். பொட்டுகட்டுதல் காணப்பட்டது.
  10. உடன்கட்டை ஏறுதல் : இம்முறை காணப்பட்டது.
  11. முத்துக்குளித்தல் : 1/10 பகுதி மன்னனுக்கு, 1/20 பகுதி மீன் கடிக்காமல், இருக்க மந்திரம் போடுபவருக்கு
  12. தண்டனை : கொலை குற்றத்திற்கு வழங்கப்பட்டது.

சீனப்பயணி : யுவான் – சுவாங் வருகை

  1. கூடுதல் படிப்பிற்காக காஞ்சி வந்தார்
  2. காஞ்சிபுரம் – 7 புனித தலங்களுள் ஒன்று

 

  1. உள்ளாட்சி மன்றங்களின் வரலாறு
  2. நிலதானம்

இதனால் சலுகைப் பெற சங்கங்கள் அமைப்பு

  1. சங்ககாலம்

அவை, மன்றம், அம்பலம், பெழியில்

  1. பல்லவர் காலம்
  2. தொண்டை மண்டல பகுதியில் 20 சபைகள் செயல்பட்டன.
  3. உத்திரமேரூர், பெருங்குழி, திருத்தணி போன்ற இடங்கள்
  4. பாண்டியர் காலம்
  1. மாறன் கடையன் கல்வெட்டு
  2. நன்னடத்தை உடையவர் மட்டும் சபை நடவடிக்கையில் பங்கு
  3. சோழர்காலம்

நிலகொடைகள், உத்திரமேரூர் கல்வெட்டு, ஊரார், சபையார், நகரத்தார், நாட்டார்.

  1. நாயக்கர்காலம்

அழிவுற்றது

  1. ஆங்கிலேயர்

அழிவு பின் (ரிப்பன் பிர

  1. 73, 74 வது திருத்தம்

 

  1. சைவம், வைணவம் ஆற்றிய தமிழ்த்தொண்டுகளை குறிப்பிடுக.

சைவம் வளர்த்த தமிழ்

  1. பன்னிரு திருமுறைகள்
  2. சைவ சமயப் புராணங்கள்
    1. பெரிய புராணம் சேக்கிழார்
    2. திருவிளையாடற்புராணம் – திரிகூடராசப்பகவிராயர்
  • கந்த புராணம்
  1. சைவ சமயச் சிற்றிலக்கியங்கள்
  1. பிள்ளைத்தமிழ்
  2. கலம்பகம்
  • தூது
  1. சைவ சித்தாந்த சாத்திரங்கள்

சிவஞானபோதம் – மெய்க்காண்டார்

  1. தலபுராணம்
  2. காஞ்சிப் புராணம்
  3. திருத்தணிகை புராணம்
  4. சைவ மடங்கள்

மதுரை, திருவாடுதுறை, தருமபுர மடம், திருப்பனந்தாள் காசிமடம்

  1. சைவ உரையாசிரியர்கள்- இறையனார்க்களவியல் உரை
  2. வைணவம் வளர்த்த தமிழ்
    1. பன்னிரு ஆழ்வார்கள்
    2. நாலாயிர திவ்யபிரபந்தம் – நாதமுனிவர்
    3. கம்பராமாயணம் – கம்பர்
    4. பாரதம் – வில்லிபுத்தூரார்
    5. வைணவ உரையாசிரியர்கள் – ஆச்சாரியர்கள்
    6. பாரதி – கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம்
    7. சோழர்கால உள்ளாட்சி முறைகள் யாவை?

சபைகூடுமிடம்

  1. முரசு அடித்தல், ஊதியம் கிடையாது
  2. கோயில் மண்டபம்

வாரியங்கள்

  1. சம்பவத்சரவாரியம் – 12 பேர்
  2. ஏரி வாரியம் -6 பேர்
  3. தோட்ட வாரியம் – 12 பேர்
  4. பணிக்காலம் – 1 வருடம்
  5. வருட இறுதியில் கணக்கு காட்ட வேண்டும்.

பல்வேறு வாரியங்களின் பணிகள்

  1. சம்பவத்சர வாரியம் – ஊரின் பொதுக்காரியங்களைச் செய்தல்
  2. ஏரிவாரியம் – ஊரின் ஏரிகளைக் கவனித்தல்
  3. தோட்டவாரியம் – விளை, புறம்போக்கு நிலம் கவனித்தல்
  4. பஞ்ச வாரியம் – பஞ்சத்தை சமாளிக்க ஊர்மக்களிடம் தானியம் வாங்கி பாதுகாத்தல்
  5. பொன் வாரியம் – பொன்னை மதிப்பிடுதல்
  6. கணக்கு வாரியம் – ஊர் கணக்குளை சரிபார்த்தல்
  7. கலிங்கு வாரியம் – நீர்ப்பாசனத்தைச் சரி செய்தல்
  8. தடிவழி வாரியம் – வயல்கள், வழிசாலைகளைப் பாதுகாத்தல்

உறுப்பினராவதற்கு தகுதியற்றோர்

  1. வாரிய பொறுப்பிலிருந்து கணக்கு காட்டாதோர்
  2. அவரது குடும்பத்தினர்
  3. பழிபாவம் செய்தவர்
  4. வன்முறைச் செயல் செய்தவர்
  5. தண்டனை பெற்றவர்
  6. பொய் கையெழுத்திட்டவர்
  7. பெண்களிடம் தவறு புரிந்தோர்

15.பழந்தமிழரின் உணவு, உடை, உறையுள், அணிகலன்கள் பற்றி விவரித்து எழுதுக.

  1. உணவு முறைகள்
  2. மரக்கறி உணவோடு புலாலுணவும், மதுவகையும் விரும்பி உண்டனர்.
  3. மறைக்காப்பாளர்கள் இராசா அன்னம் என்ற உயர்வகை நெல்லரிசியை உண்டனர்.
  4. பார்ப்பனர்கள் மாதுளங்காயை மிளகுப்பொடி (ம) கறிவேப்பிலை இட்டுப் பசுவெண்ணெயில் பொரித்து உண்டனர். ஊறுகாய் போடும் பழக்கம் இருந்தது.
  5. எயினர்கள் மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சம்பழம் போன்ற சோற்றினை உடும்புக்கறியோடு உண்டனர்.
  6. ஆயர்கள் நண்டின் சிறு குஞ்சுகளைப் போன்ற தினைச் சோற்றைப் பாலுடன் கலந்து உண்டனர்.
  7. உழவர்கள் பூளைப்பூப்போன்ற வரகுச்சோற்றை அவரைப் புழுக்கோடு உண்டனர்.
  8. மருத நிலத்தவர்கள் வெண்ணெற் சோற்றைக் கோழி இறைச்சியின் வற்றலோடு உண்டனர்.
  9. கடலோர மக்கள் கூழ் உண்டனர், மீன் சூட்டோடு உண்டனர்.
  10. அக்காலத்தில் பன்றி இறைச்சி, முயல் வேட்டையாடி உண்ணப்பட்டது. புளிப்புக்காக மாங்கனி (ம) நாவல் பழச்சாறு பயன்பட்டன.
  11. நன்கு புளித்த மோரில் ஈயலை ஊறப்போட்டு உண்டனர். கள் (ம) புலாலுணவு உண்ணுதல் தவறாக கருதப்படவில்லை
  12. தென்னை (ம) பனை மரங்களிலிருந்து இறக்கிய கள்ளைத் தவிர, வீட்டிலேயே சமைத்த “தோப்பி” என ஒருவகைக் கள் உண்ணப்பட்டது.
  13. அணிகலன்கள்
  14. பண்டைய தமிழகத்துப் பெண்கள் அணிகலன் அணிந்திருந்தனர்.
  15. யவனர் கொணர்ந்த பொன், பகைவரிடமிருந்து கவர்ந்த பொன் போன்றவை அணிகலன்களாக பயன்பட்டன.
  16. குழந்தைகளின் அணிகலன்கள்
  17. நெற்றியில் சுட்டி, பிறை
  18. மூவடம் கோர்த்த பொன் சங்கிலி
  19. கழுத்தில் ஐம்படைத்தாலி, புலிப்படைத்தாலி
  20. மோதிரம், காலில் மணிகள் பதித்த சதங்கை
  21. புகழ் – கொடுமணம்
  22. மகளிர் ஒப்பனை முறைகள்
  23. கால் விரல்
  24. மோதிரம்
  25. முத்துவடம்
  26. காதணி
  27. செம்பொன் வளை
  28. கூந்தல்

கொண்டை, குழல், பனிச்சை, சுருள், முடி என 5 வகை

  1. மலர் சூடல்
  2. அகிற்புகை
  3. களிமண் தேய்த்துக் குளித்தல்
  4. கண்மை
  5. ஆடவர் ஒப்பனை முறைகள்
  6. முடி வளர்த்து முடிந்து கொள்ளுதல்
  7. பூச்சூடல்
  8. முத்துமாலை
  9. கைவளையல்கள்
  10. வெள்ளிக்கம்பியில் கோர்த்த பொன் தாமரை மலர்கள்

iii. உடைமுறைகள்

  1. குறிஞ்சி, முல்லை நில மக்கள் பூவையும் தழையையும் கோர்த்து ஆடையாக அணிந்தனர்.
  2. கம்பளி ஆடைகளையும் அணிந்தனர்.
  3. நகர மக்கள் பஞ்சு (ம) பட்டாலான ஆடைகளை நெய்தனர்.
  4. ஆடைகள் பாம்பின் தோலை போன்று மெல்லியதாகவும் பூவேலைப்பாடுகள் செய்யப்பட்டும் காணப்பட்டன.
  5. உயர்குடியில் பிறந்த ஆண்கள் ஆண்கள் இடையில் ஒரு ஒரு வேட்டியும் மேலாடையும் அணிந்தனர்.
  6. சிலர் சட்டை அணிவதுண்டு
  7. அரசரும் அவருடைய பணியாளரும் சட்டை அணிவர். இது கஞ்சுகம் எனப்படும்.
  8. பெண்கள் இடையில் புடவையை அணிந்திருந்தனர்.
  9. மார்பை ஆடையால் மறைக்கும் வழக்கும் அக்காலத்தில் இல்லை. அதற்கு மாறாய் சந்தனம், தொப்பில் எழுதி மலர்கள் கொண்டு மார்பை மறைத்தனர்.
  10. புதுமணத் தம்பதிகள் புத்தாடையால் தம் உடலையும் முகத்தையும் மறைத்துக் கொண்டனர்.
  11. பெண்கள் வெள்ளை நிறப்புடவைகள் அணிந்து பந்தாடினர்.
  12. நுண்ணிய புடவைகள் மதுரை அங்காடியில் விற்பனையாகின.
  13. பருத்தி நூற்புத் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் பருத்திப்பெண்டிர்
  14. துணிகளை மண்ணால் வெளுப்போர் மண்ணார் எனப்பட்டனர்.
  15. அடியார்க்கு நல்லார் 36 ஆடை வகைகள் சுட்டப்பட்டுள்ளன.

 

  1. உறையுள்
  1. குறிஞ்சி, முல்லை: நிலங்களில் வாழ்ந்த மக்கள் சிறு குறு குடிசைகளில் குடியிருந்தார்கள். இவை குரம்பை எனப்பட்டன.
  2. நெய்தல்: நில பரதவர்களின் வீடுகள் புல்லாலும் வைக்கோலாலும் வேயப்பட்டன.
  3. மலையடி வாரத்தில் : வாழ்ந்த சிலரின் வீடுகள் தீட்டிய வண்ணம் போல் காட்சியளித்தன.
  4. நகரங்களில் மிகப் பெரிய மாடி வீடுகள் காணப்பட்டன. இவை வேயா மாடங்கள் எனப்பட்டன. சாளரங்கள் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருந்தன.
  5. அரண்மனையில் விடி விளக்குகள் எந்நேரமும் எரிந்து கொண்டே இருந்தன.
  6. அரண்மனையைச் சுற்றி வெற்று வெளி இருந்தன. புறமதில்கள் வெள்ளி சுதையால் பூசப்பட்டிருந்தன. உட்சுவர்கள் செம்பினால் எழுப்பப்பட்டது போன்ற இருந்தது.
  7. மாடி மேல் நிலா முற்றம் அமைந்திருந்தது. வீடுகளில் இரட்டைக் கதவுகள் அமைப்பதுண்டு.
  8. வெளியில் வீட்டு வாசலில் மேடைகள் போடப்பட்டு இருந்தன. வீட்டின் உட்சுவறில் ஓவியங்கள் எழுதும் வழக்கம் இருந்தது
  9. செல்வந்தர்கள் தம் மாளிகையைச் சுற்றி பூங்கா அமைத்தனர். வீடுகளுக்கு பின்புறம் எந்தரக் கிணறுகள் காணப்பட்டன.
  10. வேடர் – நாய்கள் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தன.
  11. ஆயர் – வெள்ளாடு, செம்மறியாடு வளர்த்தனர்
  12. பார்ப்பனர் – கோழியும் நாயும் நுழையவில்லை
  13. சங்ககாலத்தில் பூம்புகார்: மிகப்பெரிய நகரம் உட்புறம் பட்டினம், புறஆர் மருஆர் பாக்கம் எனப்பட்டது.
  14. மதுரையில் நாளங்காடி அல்லாங்காடி காணப்பட்டது.

 

  1. தமிழரின் பொழுதுபோக்கைப் பற்றி குறிப்பிடுக.

பொழுதுபோக்குகள் / விளையாட்டுகள்

சங்க இலக்கியத்தில் இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை விளையாட்டு (ம) பொழுதுபோக்கில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

1.புனலாடுதல்

பெண்களும் ஆண்களும் ஆறு, குளங்களில் புனலாடி மகிழ்ந்ததை அகப்பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன.

  1. குளித்து மணல் எடுத்தல்

“நெடுநீர்க் குட்டத்து துடுமெனப் பாய்ந்து

குளித்து மணற்கொண்ட கல்லா இளமை” என புறநானூறு பாடல் குறிப்பிடுகிறது.

  1. வேட்டையாடுதல்

வேடர்களுக்கு வேட்டையாடுதல் தொழில் மன்னர்களுக்கு அது வீரமிக்க பொழுதுபோக்காகும்.

  1. இசையும் கூத்தும்

பாணர், கூத்தர், விறலியர் காணப்பட்டனர்

  1. வீரவிளையாட்டுகள்

ஏறுதழுவுதல், சல்லிக்கட்டு, இளவட்டக்கல், உரிமரம் ஏறுதல், சடுகுடு ஆட்டம்

  1. வட்டாடல்

இதற்காக அரங்கம் அமைத்துக் காய்களை நகர்த்தி வட்டாடுவர். இதனை இளங்கீரனார் நற்றிணைப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

  1. பந்தாடுதல்

அன்றைய பெண்கள் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு விளையாடினர்.

  1. கழங்காடுதல்

இது மகளிர் விளையாட்டு திண்ணைகளில் பொன்னலன் கழங்கினை வைத்து விளையாடினர்.

  1. ஊசலாட்டம்

மரத்தின் கிளையில் கயிற்றினை ஊசலாகக்கட்டி, அதில் அமர்ந்து ஆடி மகிழ்தல் இதனைப் பற்றிய குறிப்பு குறிஞ்சி கலியில் உள்ளது.

10.ஓரையாடுதல்

இது மகளிர் விளையாடும் விளையாட்டு ஆமை, நண்டு ஆகியவற்றை கோலினைக் கொண்டு துரத்தி விளையாடுவர்

  1. வண்டலிழைத்தல்

மணலால் பாவை செய்து அதற்குப் பூச்சூட்டி மகிழும் விளையாட்டு

12.முக்காற்சிறுதேர்

மூன்று கால்களை உடைய சிறிய தேரினை ஓட்டி விளையாடுவர்.

13.கிலிகிலியாடல்

சிறுவர்கள் இன்று கிளகிளுப்பை என்ற கருவியைக் கொண்டு விளையாடுவது போல் சங்க காலத்திலும் விளையாடி இருக்கின்றனர்.

14.கோழிப்போர்

ஆட்டுக்கிடாய், காடை, கவுதாரி, கோழி முதலான பறவைகளைப் பழக்கிப் போரிட செய்தல்

  1. தமிழ்ச் சமூகத்தில் காணப்பட்ட சமயப் பொது நோக்கு எண்ணங்களையும் மாறுபட்ட போக்குகளையும் விளக்குக.
  2. சமயப் பொதுநோக்கு
    1. மனித இனத்தை நல்வழிப்படுத்த தோன்றியது
    2. சமயம் உலகச்சமயங்கள் பலவும் ஒன்று சேருமிடம் ஒன்று தான்
  • வழிமுறைகள் தான் வேறுபடும்
  1. சங்ககாலம் தொட்டு பிற்காலம் வரையில் மன்னர்கள் எச்சமயத்தவராயினும் சமயவாழ்வில் தலையிடவில்லை.
  2. இலக்கியங்களில் சமயப் பொதுநோக்கு
  3. புறநானூறு

சிவனும் திருமானும் ஒரே பாட்டில் பாராட்டப்படும் நிலை இருந்தது

  1. பாரதம் பாடிய பெருந்தேவனார்

அகநானூறுக்கு சிவ வணக்கமும், நற்றிணைக்கு திருமால் வணக்கமும் பாடியுள்ளார்.

  1. புறநானூறு பாடல் ஒன்று

ஒரு பாடல் சமணகளுக்கும் வைதிகளுக்கும் மனக்கசப்பு இருந்ததை கூறுகிறது. இருப்பினும் இது தமிழ்ச் சமுதாயத்தை தீண்டவில்லை.

  1. திருவள்ளுவர்

கடவுள் வாழ்த்தில் எந்த ஒரு சமயத்தையும் பற்றியும் கூறவில்லை. கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல் போன்ற சமண, பௌத்தர்களின் கொள்கையை போற்றியுள்ளார்.

  1. இளங்கோவடிகள்
  1. கடவுள் பெயரில் கடவுள் வாழ்த்து பாடவில்லை
  2. கோவலன் புத்த விகாரத்தை வலம்வருதல்
  • மாதவி சமணத் துறவியை வணங்குதல்
  1. செங்குட்டுவன் திருவரங்கப் பெருமானை வணங்குதல்
  2. இதன் மூலம் சமய வேறுபாடற்ற தமிழ்நாட்டைக் காட்டியுள்ளார்.

iii. பக்தி இலக்கியங்களில் சமயப் பொதுநோக்கு

  1. சமண பௌத்தர்களுக்கும், சைவவைணவர்களுக்கும் இடையிலான பிணக்கால் நூலழி, கோயில் அழிப்பு ஏற்பட்டன.
  2. சமயப் பொதுமை வேண்டி பொய்கையாழ்வார், சிவனையும் திருமாலையும் ஒன்றாக பாடியுள்ளார்.
  3. திருமாலின் அவதாரம் பாடவந்த கம்பர், பொதுவான இறைவணக்கம் பாடினார்.
  4. சோழ மன்னர்கள்: சைவராயினும் பிறசமயத்தாரிடம் பெருந்தன்மையுடன் இருந்தனர்.
  5. நாயக்கர் காலத்தில்: முகமதியர்கள், கிறிஸ்தவர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்தனர்.
  6. தாயுமானவர்: அனைத்து மதமும் சேரும் இடம் ஒன்றே என்றார் 7. வள்ளலார்: சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்
  7. பிற்காலத்தில் சமயப்பொது நோக்கு
  1. பாரதியார்: அவர்கள் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் அனைவருமே ஒன்று என்றார்.
  2. முகமதியப் பள்ளி வாசல்களுக்கும், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் இந்துக்கள் சென்று வழிபடுகின்றனர்.
  3. திரு.விக: அவர்கள் பொதுச்சமயம் பற்றி பேசுகிறார்
  4. புதிய ஆத்திச்சூடியில்: சிவன், திருமால், ஏசு, அல்லா அனைவரும் ஒன்றே என பாடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

Scroll to Top