6.தமிழ் மற்றும் ஏனைய துறைகள் : மக்கள் தொடர்பு ஊடகம், கணினி முதலானவை
சமுதாய முன்னேற்றத்தில் இதழ்களின் பங்களிப்பு குறித்து விளக்குக
(OR)
- தமிழர்களிடையே பத்திரிக்கைகள் உருவாக்கிய விழிப்புணர்வு பற்றி எழுதுக.
தமிழர்கள் மத்தியில் பத்திரிக்கைகள் மூலம் எற்பட்ட விழிப்புணர்வு
- வாசிப்பு வழக்கம் ஏற்பட்டது.
- முடிதிருத்தங்களும், தேநீர் கடைகளும் படித்தல் அரங்குகளாக மாறின.
- அரசியல், நடப்பு விவகாரங்கள், கலை, விளையாட்டு பற்றிய செய்திகளில் விழிப்புணர்வு ஏற்பட்டது.
- ஜோதிடம் பார்ப்பது
- தினத்தந்தி கல்வியறிவற்றவனையும் ஒரு வாசகனாக மாற்றியது.
- தேசிய வாதம், தேசபக்தி வளர்ந்தது.
- டி.எஸ். சொக்கலிங்கம் “தமிழ்நாடு இதழின் ஆசிரியர் டாக்டர் வரதராஜீலு செய்த சேவைகளைப் பாரட்டினார்.
- தலையங்கங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் தமிழ் மக்களை புதிய பாதையில் செல்ல வழிகாட்டின.
- தினமணி கல்கி, ஆனந்த விகடன், கலைமகள் போன்றது உலக செய்தி (ம) நிகழ்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அடையாளம் காட்டியது
- இந்தியா, வெளிநாடுகளிலுள்ள மொழி, தேசம், மாநிலம், சங்கங்கள் பற்றிய அறிவு தமிழ் பத்திரிக்கைகளால் பரவலாக மேம்படுத்தப்பட்டது.
- பெண்களுக்கான இதழ்கள் வெளிவந்தன.
விடுதலைப்போராட்டத்தில் தமிழ் இதழ்கள்
- 1882 ல் கி. சுப்பிரமணியம் வார இதழாக சுதேசமித்திரனை துவங்கினார்.
- 1904ல் பாரதியார் சுதேச மித்திரனில் துணை ஆசிரியராக சேர்ந்தார்.
- 1907ல் இந்தியா – தமிழ் மாத இதழ்
- பாலபாரதம் – ஆங்கில வாரஇதழ் பாரதியார் துவங்கினார்.
- இதன் மூலம் நாட்டு மக்களிடையே விடுதலை உணர்வு வளர்ந்தது.
- 1917 ல் திரு.வி.க. தேசபக்தன் நாளிதழை துவக்கினார்.
- நவசக்தி, திராவிடன், தமிழ்நாடு, ஜெயபாரதி, சுதந்திரச் சங்கு, ஜனசக்தி போன்ற இதழ்கள் மக்களிடையே விடுதலை உணர்வை ஏற்படுத்தின.
- தமிழ் மக்களின் வாழ்க்கை பாணியில் சினிமாவின் கலை – விவரி.
- சினிமா தமிழ் இளைஞர்களையும் (ம) அனைத்து வகையான மக்களையும் மகிழ்விக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகம்
- குடும்ப சினிமாக்கள் பெண்களின் சோகத்தினை வெளிப்படுத்தத் துணை புரிந்தன.
- சினிமா உழைக்கும் மக்களுக்கு பொழுதுபோக்காக மாறியது.
- அரசியல், சமூக சினிமாக்கள் தமிழ் சமூகத்தில் பிரபலமாக உள்ளன.
- ரசிகர் மன்றம், கதா நாயகர்களின் வழிபாடு ஆகியவை ரசிகர்களால் பின்பற்றப்படுகின்றன.
- நடிகர்களின் நடை, உடைகள், முடி அலங்காரம் ஆகியவை ரசிகர்களால் பின்பற்றப்படுகின்றன.
- சினிமா பாடல்கள் மக்களிடையே செல்வாக்கைப் பெற்றன.
- இளைஞர்கள், மாணவ – மாணவிகள் நடிகர் / நடிகைகளால் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள்.
- சினிமாக்களால் ஒரு புதிய வகையான கலப்பு இசை நுழைந்தது.
- தமிழ் கலாச்சாரத்தில் ரேடியோவால் ஏற்பட்டவிளைவுகள் யாவை?
- முதலில் பொழுதுபோக்கின் கட்டத்தின், வானொலி மக்களுக்கு தகவல் தொடர்பு வழிமுறையாக பங்கேற்கிறது.
- 1950 – 1980 கால கட்டத்தில் சினிமா பாடல்கள் சோர்வாகவும் சோகமாகவும் இருந்த மக்களை மகிழ்வித்தன.
- வானொலியின் பாடல்கள் மக்கள் மனதில் ஒரு வகையான கனவுகளை உருவாக்குகின்றன.
- வயலும் வாழ்வும், விவசாயம், அதிக அறுவடை பெற விவசாயிகளுக்கு அதிக முன்னுரிமை செய்திகளை அளித்தன.
- வானொலி நாடகம், ஒலிச்சித்திரம், மக்களின் அன்றாட வாழ்வுகள், வானொலி நேயர்விருப்பம் என்ற பெயரில் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றினர்.
- பிபிசி (ம) ஸ்ரீலங்கன் தமிழ் ஒலிபரப்புக்ள தமிழ் பாடல்கள் (ம) செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்த்தன.
- விளம்பரங்கள் தயாரிப்பாளர்களின் பொருட்களை வாங்குவதற்காக வணிக ரீதியிலான தந்திரங்களை உருவாக்கியது.
- செய்திகள், தமிழ் இசையின் பாடல்கள், கர்நாடக இசைப் பாடல்கள், வானிலை செய்திகள் ஆகியவை தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலப்படுத்தப்பட்டன.
- இன்று டிவி (ம) வலைதளங்களை அடுத்ததாக வானொலி இரண்டாம் கட்டத்தில் உள்ளது.
- எப்எம் ரேடியோக்கள் மக்களுக்காக தொடர்ந்து ஒளிபரப்படுகின்றன.
- பிரதமர் மோடி வானொலி மூலம் இந்திய மக்களுக்கு மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம் மாதம் ஒருமுறை பேசி வருகிறார்.
- கணினி (ம) வலைதளம் மூலம் மாறிய மக்களின் வாழ்க்கை முறை விவரி.
- கணினி தமிழ் மக்களின் விட்டுப்பொருட்களில் ஒன்றாகின. உலக அளவில் தமிழ் மக்களின் அறிவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இணையத்தின் இணைப்பால் புதிய வகை வருவாய் (ம) வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
- சிலர் கணினி மூலம் அதிகம் சம்பாதிக்க குற்ற வழிகளைப் பயன்படுத்துகின்றனர்.
- சிலர் தங்களது தவறான கருத்து (ம) வழிகளால் குற்றவாளிகளாக உள்ளனர்.
- மென்பொருள் வல்லுநர்கள் தங்கள் வேலைச் சுமையால் பாதிக்கப்படுகிறர்கள்.
- வெளிப்பற விளையாட்டுகள் குறைந்து வருகின்றன.
- டிவி சீரியல்களைத் தொடர்ந்து பார்த்து சினிமாக்கள் ஒரு புதுவகையான செயலற்ற தன்மையை உருவாக்குகின்றன.
- சைபர் குற்றங்கள் மோசமான நபர்களால் உருவாக்கப்படுகின்றன.
- தொலைகாட்சி மூலம் உலகமே வீட்டிற்கு வந்து விட்டது.
- வாசிப்பு பழக்கம் குறைந்தது, குடும்ப் உறுப்பினர்களிடையே பேச்சுகள் குறைந்து விருகின்றன.
- தொலைகாட்சி (ம) வலைத்தளங்களில் உள்ள தொடர்பு நம் மக்களை கலாச்சார ரீதியாக பாதிக்கின்றன.
- தொலைக்காட்சியைப் பார்ப்பதால் விருந்தோம்பல் குறைகிறது.
- விளம்பரங்களின் வணிக வணிக நோக்கம். மக்களது பழக்க வழக்கங்களில் பின்னடைவை உண்டாக்குகிறது.
- தமிழர்களிடையே சுற்றுலா மேம்படுத்தப்படுகிறது.
- தமிழர்களுக்கு விரைவில் உலக விவரங்கள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
- விளையாடுவதற்கான அறிவு, விளையாட்டு போட்டிகள், தடகள போட்டிகள் நமது இளைஞர்களின் தேசப்பற்றை மேம்படுத்துகின்றன.
- தமிழ்மொழியின் வளர்ச்சியில் மின்னணு ஊடகங்களின் பங்கினை விரிவாக விளக்குக.
மின்னணு ஊடகத்தின் பங்கு
- இணையத்தில் தமிழ்
- தமிழ் இணையத்தின் வளர்ச்சி
- தமிழ் இணையக் கல்விக்கழகம்
- மதுரைத் திட்டம்
- தமிழ் விக்கிப்பீடியா
- தமிழ் உள்ளீட்டுத் தொழில்நுட்பம்
- தமிழ் வலைப்பூ
- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
- இணையத்தில் தமிழ் இடம்பெற்ற விதத்தினை விவரி.
இணையத்தில் தமிழ்
- தமிழர்கள் தங்கள் வாழிடங்களை ஐந்தினைகளாக வரையறுத்தனர்.
- இன்று விண்ணும் விண்சார்ந்த இணையமும் ஆறாம் திணையாக உருவெடுத்துள்ளது.
இணையத்தில் ஏறிய முதல் இந்திய மொழி
- 1995 ல் சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட மலாய், ஆங்கிலம், மாண்டரின் தமிழ் ஆகிய நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலைத்தளத்தில் முதலில் அரங்கேறியது தமிழ்
- சிங்கப்பூர் நாவ்யாங் பல்கலைக்கழக பேராசிரியர் நா. கோவிந்தசாமி சீனக்கணினி வல்லுநர்களோடு இணைந்து “தமிழ்நெட்’ என்ற எழுத்துருவினை உருவாக்கினார்.
- அவரால் தான் இணையத்தில் ஏறிய முதல் இந்திய மொழி தமிழ் என்ற பெருமை கிடைத்தது.
தமிழ் இணையத்தின் வளர்ச்சி
- 1996 ன் இறுதியில் உலகெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் பலரும் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி பயன்படுத்தத் தொடங்கினர்.
- இணையத்தில் தமிழ்த் தகவல் பரிமாற்றத்திற்கான முதல் உலக மாநாடு 1997 ஆம் ஆண்டு ‘தமிழ் நெட் 97’ என்ற பெயரில் சிங்கப்பூரில் நடைபெற்றது.
- அதில் தமிழ் எழுத்துரு குறித்துக் கணினித்தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் கலந்துரையாடினர்.
- 1999ல் நடைபெற்ற இரண்டாவது கணினி மாநாட்டில் கணினித் தமிழ்ச் சங்கம் உருவானது.
- தமிழ்நாடு அரசின் உயர்மட்ட ஆய்விற்குப்பின் ‘தமிழ் 99′ விசைப்பலகை உருவாக்கப்பட்டது.
- ‘ஒருங்குறிக் கூட்டமைப்பு’ உலகளவில் உள்ள அனைத்து மொழிகளுக்கம் ‘ஒருங்குறி’ என்ற குறியேற்ற முறையை உருவாக்கியது. இவ்வமைப்பில் தமிழக அரசு தமிழ் மொழிக்கான உறுப்பினரானது.
- தமிழ் ஒருங்குறிக்குறியேற்ற முறையில் இருந்த குறைகளைக் களைய, அரசுடன் தமிழ் இணையக் கல்விக் கழகம் (ம) கணினித் தமிழ்ச் சங்கம் இணைந்து முயற்சி செய்தது.
- இதனால் தான் இன்று இணையத்தில் தமிழை எளிதாக பயன்படுத்த முடிகிறது.
தமிழ் இணைய நூலகம்
(OR)
2.தமிழ் இணையக் கல்வி கழகத்தின் தோற்றத்தையும் குறிக்கோளையும் எழுதுக.
தமிழக இணையக் கல்விக்கழகம்
- 2001 ல் தமிழ் இணையக் கல்விக்கழகம் நிறுவப்பட்டது.
- இந்தியாவில் இணையம் வழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் வழங்க நிறுவப்பட்ட முதல் அமைப்பாகும்.
- 1999ல் நடைபெற்ற இரண்டாவது தமிழ் இணைய மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியானது.
- இது முழுநேர இயக்குநர் ஒருவரின் பொறுப்பில் செயல்படும்.
- இது தமிழ் இணையக் கல்விக்கழக ஆட்சிக்குழுவால் வழிநடத்தப்படுகிறது.
குறிக்கோள்கள்
- உலகளாவிய தமிழ்ச் சமுதாயத்தினருக்கும் தமிழியலில் ஈடுபாடுள்ள மற்றையோர்க்கும் தமிழ்மொழி இலக்கியம், பண்பாடு, பற்றிய கல்விச் சாதனங்களை உருவாக்கி இணையம் வழியாக அளித்தல்
- உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் உருவாக்கும் கல்வியறிவுச் சாதனங்களைத் தொகுத்து அவற்றைத் தமிழ் மக்களுக்கு வழங்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுதல்
- தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடத்திட்டங்களை வகுத்தல்
- மொழியறிவுக்காகவோ, சான்றிதழ், பட்டயம், பட்டம் பெறுவதற்காகவோ கற்போருக்கு வாய்ப்பளித்தல்
- தகுதிக்கு எற்பத தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழியாகச் சான்றிதழ் / பட்டயம் / பட்டம் வழங்க ஏற்பாடு செய்தல்
- 50 லட்சம் பக்கங்களுக்கு மேல் பதிவேற்றம் செய்யப்பட்ட மின்நூலகம், கணினித்தமிழ் ஆய்வுகள். மென்பொருள், செயலிகள் உருவாக்கம், கணினி தமிழ்ப் பேரவை முதலியன இதன் செயல்பாடுகளில் குறிப்படத்தக்கன.
- மதுரைத்திட்டம் (1998)
- இது 1998 ல் துவங்கப்பட்டது.
- அரசு, தனியார் உதவியோ, வாணிக நோக்கமோ இன்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ முயற்சி
- உலகின் வெவ்வேறு நாடுகளில் வாழும் 300க்கும் மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் சேர்ந்து இத்திட்டத்தைச் செயலாக்கம் செய்து வருகின்றனர்.
- இதற்காக தமிழ் இலக்கியங்களைக் கணினியில் உள்ளிட்டு, பிழை திருத்தி மின்பதிப்புகளாகத் தயாரிக்கின்றனர்.
- பின் இதனை மதுரைத்திட்டத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.
- விருப்பமுள்ளவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெறலாம்.
- தமிழ் விக்கிப்பீடியா (2003)
- இது 2003ல் துவங்கப்பட்டது.
- மயூரநாதன் என்பவர் இதற்கான முகப்புப் பக்கத்தை தமிழில் உருவாக்கியுள்ளார்.
- தமிழ் விக்கிப்பீடியா நூலின் ஆசிரியர் எம். சுப்பிரமணி
- இது கட்டற்ற பன்மொழிக் களஞ்சியத் தொகுப்பான வீக்கிப்பீடியாவின் ஒரு பகுதியாகும்.
- தலைமையிடம் -அமெரிக்கா
- விக்கிபீடியா அறக்கட்டளை என்ற வாணிக நோக்கமற்ற அமைப்பு இதனை நிர்வகித்து வருகிறது.
- ஆங்கிலம் தெரிந்தால் தான் கணினியைப் பயன்படுத்த முடியும் என்ற நிலையை இவை மாற்றியுள்ளன.
உள்ளீட்டில் புதிய முறைகள்
- கையெழுத்து உணரி
- ஒளிவழி எழுத்தறிவான்
- பேச்சுரை மாற்றி
- தமிழ்ச் சொற்செயலி
- சொற்பிழைத் திருத்தி
- சந்திப்பிழை திருத்தி
- தமிழ்ச்சொல் சுட்டி
- இலக்கணப் பிழை திருத்தி
- மின் அகராதி
- இயந்திர மொழி பெயர்ப்பி
- தமிழ் இணைய தளங்கள்
தமிழின் முதல் இணைய தளம் “தமிழ் சினிமா” மற்றொன்று “ஆ மின்னிதழ்”
- தமிழின் முதல் வலைப்பூ
2003ல் நவன் வலைப்பூ பிளாக்கர்ஸ்
2003ல் கார்த்திக்ராமாஸ் வலைப்பூ பிளாக்டிரைவ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
- முதல் மாநாடு 1997 – சிங்கப்பூர்
- 2வது – 1999 சென்னை
- 14வது – 215 சிங்கப்பூர்
- 14 இணைய மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
- மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
- தமிழ்க் கணிமைக்கான வளர்ச்சித் திட்டங்கள் முன்னாக்கப்படுகின்றன.
