4.தமிழகத்தில் பகுத்தறிவு, திராவிட இயக்கங்களின் வளர்ச்சி - தமிழகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் பங்கு

. தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை எழுதவும்.

தமிழ் மறுமலர்ச்சி

அச்சு இயந்திரத்தின் அறிமுகம்

திராவிட மொழிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட மொழியியல் ஆய்வுகள் தமிழ் மறுமலர்ச்சிக்கு காரணமாயின.

அச்சுத் தொழில் நுட்பத்தின் வருகை

  1. ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து அச்சில் ஏறிய முதுல் மொழி – தமிழ்
  2. 1578 – தம்பிரான் வணக்கம் எனும் நூல் கோவையில் வெளியிடப்பட்டது.
  3. 1709 – முழமையான அச்சகம் சீகன் பால்கு என்பவரால் தரங்கம் பாடியில் நிறுவப்பட்டது.
  4. 1812-திருக்குறள் புத்தகம் வெளியிடப்பட்டது.

பதிப்பிக்கப்பட்ட தமிழ் செவ்வியல் இலக்கியங்கள்

  1. சி.வை. தாமேதரனார் – பனையோலைகளில் கையால் எழுதப்பட்ட பல தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பதிப்பித்தார். தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை, சூளாமணி போன்றவை.
  2. உ.வே.சாமிநாதர் பதிப்பித்தவை – சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை, மணிமேகலை, ஐங்குநுறூறு, பதிற்றுப்பத்து
  3. பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது தமிழ் மக்களின் வரலாறு, மரபு, மொழி, இலக்கியம், சமயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

கோட்பாடுகள்

  1. W எல்லிஸ் – தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட குடும்பத்தை சார்ந்தவை. அவை இந்தோ ஆகிய மொழிகளோடு தொடர்பில்லாதவை.
  2. ராபர்ட்கால்டுவெல் – திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் தமிழ் திராவிட மொழிகளுடன் நெருக்கமான தொடர்பு உள்ளது. ஆனால் சமஸ்கிருத்துடன் ஒப்பு இல்லை.
  3. பி.சுந்தரனார் – மனோன்மணியம் நூலில் தமிழ் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டுள்ளது.
  4. தமிழ் நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர, தமிழ் மறுமலர்ச்சி வித்திட்டது.

ஆபிரகாம் பண்டிதர் – தமிழ் இசைக்குச் சிறப்பு செய்ததோடு, தமிழ் இசை வரலாறு குறித்த நூல்களையும் வெளியிட்டார்.

பரிதிமாற் கலைஞர்

  1. தமிழின் மீது சமஸ்கிருதம் கொண்டிருந்த, செல்வாக்கை கண்டுபிடித்தார்.
  2. இயற்பெயர் – சூரிய நாராயண சாஸ்திரி
  3. தமிழை செம்மொழி என்றார்.
  4. சென்னை பல்கலைக்கழகம் வட்டார மொழி என தமிழை அழைத்த கூடாது என்றார்.
  5. 14 வரிச்செய்யுள் வடிவத்தை அறிமுகம் செய்தார்.

மறைமலை அடிகள்

  1. இயற்பெயர் – வேதாச்சலம்
  2. தனித்தமிழ் இயக்கம் உருவாக்கினார்.
  3. விளக்க உரை – பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு
  4. பணிபுரிந்த பத்திரிக்கை – சித்தாந்த தீபிகா
  5. பிரமணரல்லாதோர் இயக்கத்தில் பங்கு பெற்றார்.
  6. ஒரே கடவுள் கொள்கை – சுயமரியாதை இயக்கத்தில் முதலில் இருந்தார் பகுத்தறிவாளர்

தனித்தமிழ் இயக்கம் – 1916

நோக்கங்கள்:

  1. தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துதல்
  2. சமஸ்கிருதத்தின் செல்வாக்கை தமிழ்மொழியிலிருந்து அகற்றுதல்
  3. தமிழ் மொழி மீது தாக்கம் செலுத்தும் வேற்றுமொழி வார்த்தைகளை அகற்றுதல்

துவக்கியவர்

  1. தூய்மை வாதத்தின் தந்தை மறைமலை அடிகள்
  2. முக்கிய பங்கு வகித்தவர் – நீலாம்பிகை

செயல்பாடுகள்:

  1. வேதாச்சலம் – மறைமலை அடிகள் (பெயர்)
  2. ஞான சாகரம் – அறிவுக்கடல் (பத்திரிக்கை)
  3. சமரச சன்மார்க்க சங்கம் – பொதுநிலைக்கழகம் என மாற்றம்
  4. தமிழ் சொற்களுக்குள் புகுந்து விட்ட சமஸ்கிருதச் சொற்களுக்கு இணையாகப் பொருள் தரக்கூடிய தமிழ் சொற்கள் அடங்கிய அகராதி ஒன்றை நீலாம்பிகை தொகுத்தார்.
  5. இவ்வியக்கம் தமிழ் சமூகத்திலிருந்த பிரமணிய (ம) சமஸ்கிருத மரபுகளை எதிர்கொண்ட சமூக இயக்கங்களுக்கு வழி வகுத்தது.
  1. நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின் புலத்தை விளக்கி, சமூக நீதிக்கான அதன் பங்களிப்பைச் சுட்டி காட்டவும்

தோற்றம்:

  1. 1909 – மதராஸ் பிரமணரல்லாதோர் சங்கம் – சுப்பிரமணியம், புருஷோத்தமன்
  2. 1912 – மதராஸ் ஐக்கிய கழகம் – C. நடேசனார்
  3. 1916 – திராவிடர் இல்லம் நிறுவப்பட்டது. – C. நடேசனார்
  4. பிராமணரல்லாதோர் பட்டதாரிகளுக்கு உதவுவது, கற்கவைப்பது நோக்கம்

பின்புலம்

  1. பிரமணரல்லாதோர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1916 நவம்பர் 20ல் உருவாக்கப்பட்டது.
  2. உருவாக்கியவர்கள் – நடேசனார், T.M. நாயர், தியாகராய செட்டியார், அலமேலுமங்கை, தாயரம்மாள்.
  3. கொள்கையை பரப்ப பத்திரிக்கைகள் – திராவிடன், ஜஸ்டிஸ், ஆந்திர பிரகாசிகா
  4. 1920 நீதிக்கட்சி என மாற்றம்
  5. 1920 – தேர்தலில் வெற்றி பெற்ற சுப்புராயலு முதல் அமைச்சராக பொறுப்பேற்றார்.

சமூக நீதி பங்களிப்பு:

  1. பிராமணர் அல்லாதவர்களுக்கு ஆதரவாக இறங்கியது
  2. மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு கல்வி, வேலைவாய்ப்பை வழங்கியது
  3. சாதி மறுப்பு திருமணத்திற்கு தடையாக இருந்த சட்டசிக்கல்களை நீக்கியது
  4. பொது இடங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுத்தது
  5. 1921ல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதன் முதலாக கொண்டு வந்தது.
  6. 1924 ல் பணியாளர் தேர்வு வாரியத்தை அறிமுகப்படுத்தி, இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்தியது
  7. 1926 ல் இந்து அறிநிலையத்துறைச் சட்டத்தை கொண்டு வந்து, கோவில் நிர்வாகத்தை நிர்வகிக்க வழி செய்தது.
  8. ஏழை எளிய மக்களுக்கு வீடுகட்ட இலவச மனைப்பட்டாக்கள் வழங்கியது.
  9. தேவதாசி முறையை ஒழித்தது
  10. மதிய உணவுத்திட்டம் சென்னையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  11. வகுப்புவாரி ஆணையம் 1921, 1922 ல் வெளியிடப்பட்டன.

 

  1. தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா. பெரியாரின் தீர்மான கரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.

ஈ.வெ.ரா. பெரியார்

  1. ஈரோட்டைச் சார்ந்தவர்
  2. ஆரம்ப காலத்தில் இந்து மதப்பற்றாளராக இருந்து வெறுத்து பின் காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.
  3. காங்கிரஸ் கட்சியில் பிராமணர்களின் ஆதிக்கத்தை வெறுத்து, 1925ல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.

பெரியாரின் பங்களிப்பு:

  1. பகுத்தறிவுக் கருத்துக்களை மக்களிடையே பரப்பினார்.
  2. குடியரசு, ரிவோல்ட், புரட்சி பகுத்தறிவு விடுதலை பத்திரிக்கைகள்
  3. பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து, இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்.
  4. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தினார்.
  5. கேரளா -வைக்கம் கோவில் நுழைவு போராட்டம்
  6. மது குடிப்பதை தவிர்க்க தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களை வெட்டினார்.
  7. கோவில்களில் நிலவிய பரம்பரை அர்ச்சகர் முறையை எதிர்த்து அனைத்து நபர்களும் அர்ச்சகர் ஆகலாம் என வாதிட்டவர்.
  8. சுயமரியாதை திருமணங்களை பரிந்துரைத்தவர்.
  9. சேரன்மகாதேவி குலப் பள்ளியில் நடைபெற்ற சாதி வேறுபாடுகளை களைய முற்பட்டவர்.
  10. சமயம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்
  11. குலக்கல்வி திட்டத்தை எதிர்த்தார்

பெரியார் ஒரு பெண்ணியவாதி

  1. பெரியார் ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்தார்.
  2. குழந்தை திருமணம், தேவதாசி முறையை எதிர்த்தார்.
  3. பெண்களின் மோசமான நிலைக்கு குரல் கொடுத்தார்.
  4. பெண்ணியம் குறித்து ‘பெண் ஏன் அடிமையாளாள்” என்ற நூலை எழுதினார்.
  5. பெண்கள் விவாகரத்து பெறவும் சொத்தில் பங்கு பெறவும் உரிமை உண்டு என்றார்.
  6. திருமணம் செய்து கொடுப்பது எனும் வார்த்தையை தவிர்த்து, வாழ்க்கைத்துணை என்று பயன்படுத்த வேண்டினார்.
  7. குடும்பக்கட்டுப்பாடு, கருத்தடையை ஆதரித்தார்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கம்

  1. தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மேம்பாட்டிற்கான திட்டம்
  2. சடங்குகளும் சம்பிராதயங்களும் இல்லாத சாதிகளற்ற பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடற்ற ஒரு சமூகத்தை இவ்வியக்கம் ஆதரித்தது.
  3. பகுத்தறிவு, சுயமரியாதை அடிப்படை
  4. பெண்களின் தாழ்வு நிலைக்கு காரணம் எழுத்தறிவின்மை என்றார்.
  5. அனைருக்கும் கட்டாய தொடக்கக் கல்வியை வழங்க பாடுபட்டது.
  6. சமூக மூடநம்பிக்கைகளை எதிர்த்தது.
  7. பெண்களின் விடுதலைக்கு பாடுபட்டது.
  8. பிராமணரல்லாத இந்துக்கள், இஸ்லாமியர்களின் நலனுக்காக போராடியது.
  9. திராவிட இனம் என்ற சிந்தனையை வளர்த்தது.
  10. இஸ்லாமின் மேன்மை மிகு கோட்பாடுகளை (சமத்துவம், சகோதரத்துவம்) பாராட்டியது.
  11. இந்திய விடுதலைக்கு முன்பு மொழிப் போராட்டம் பற்றி கூறுக.

மொழி

  1. மொழி என்பது அடையாளத்தின் வலிமையான குறியீடு
  2. இது ஒரு சமூகத்தின் பண்பாடு (ம) உணர்களுடன் இயைந்து நிற்பது
  3. மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கம் பொரியாரின் எழுத்து சீர்திருத்தம் ஆபிராகம் பண்டிதரின் தமிழிசை இயக்கம் தமிழ் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது.

ஆபிரகாம் பண்டிதர்

  1. தமிழர் இசை முறையை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றார்.
  2. 1912 தஞ்சாவூர் சங்கீத வித்யா மகாஜன சங்கம்
  3. 1943 – முதல் தமிழிசை மாநாடு

இந்தி எதிர்ப்பு போராட்டம் – 1937-39

  1. தமிழ் நாட்டில் வெவ்வேறு காலப் பகுதிகளில் இந்திமொழி கட்டாய மொழியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
  2. இது தமிழ் மொழிக்கும் பண்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக கருதப்பட்டது.
  3. சென்னை மாகாண முதல்வராக இருந்த இராஜாஜி அவர்கள் இந்தி மொழியை பள்ளிகளில் கட்டாயமாக்கினார்.
  4. இதனால் சென்னை மாகாணத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
  5. இது திராவிடர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் செயல் என பெரியார் தெரிவித்தார்.
  6. தமிழ்மொழி மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும் என மறைமலை அடிகள் எச்சரித்தார்.
  7. இது பிராமணர்களின் ஆதிக்கத்தையும், சமஸ்கிருதமொழியின் ஆதிக்கத்தையும் தோற்றுவிக்கும் என தமிழ் ஆர்வலர்கள் கண்டித்தனர்.
  8. நாடு முழுவதும் பெரிவாரியான மக்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள் நடத்தின.
  9. இரயில் மறிப்பு போராட்டங்கள் அதிகம் நடந்தன.
  10. கல்லூரி மாணவர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் தீவிரமாக பங்காற்றியோர்

  1. நீதிக்கட்சி A.T. பன்னீர் செல்வம்
  2. தாளமுத்து நடராஜன்
  3. கி.ஆ.பொ. விசுவநாதம்
  4. மறைமலை அடிகள்
  5. பாரதிதாசன்
  6. தமிழநாட்டில் பெண்கள் இயக்கங்கள் பற்றி எழுதுக.
  7. இந்தியப் பெண்கள் சங்கம் – 1917
  8. அகில இந்தியப் பெண்கள் மாாநாடு – 1927
  9. இந்தியப் பெண்கள் சங்கம் – 1917 (அடையாறு)
  10. துவக்கியோர் – அன்னிபெசன்ட், டோரதி ஜின ராஜதரசா, மார்கரெட் கசின்ஸ்
  11. சென்னை (அடையாறு) – இடம்
  • பணிகள் – தனிநபர் சுகாதாரம், திருமணச்சட்டங்கள், வாக்குரிமை, குழந்தை வளர்ப்பு, பொது வாழ்வில் பெண்களின் பங்கு பற்றிய பல்வேறு மொழிகளில் துண்டு பிரசுரம் (ம) செய்தி மடல்களை வெளியிட்டது.
  1. அகில இந்திய பெண்கள் மாநாடு – 1927
  2. இந்தியப் பெண்கள் சங்கம், பெண் கல்வி குறித்த பிரச்சனைகளை கையாள மாநாட்டை நிறுவியது
  3. அரசு பெண்களின் மேம்பாட்டிற்காக பலகொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றது.
  4. சுயமரியாதை இயக்கம்
    1. இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று பெண்களின் விடுதலையாகும்.
    2. இதில் பாலின சமத்துவம், பாலினம் குறித்த சமூகத்தின் உணர்வுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காகப் பணியாற்றினர்.
    3. முக்கியமானோர்
    4. முத்துலட்சுமி அம்மையார்
    5. நாகம்மை
  • கண்ணம்மா
  1. நீலாவதி
  2. மூவலூர் இராமாமிர்தம்
  3. ருக்மணி அம்மாள்
  • அலமேலு மங்கை தாயாரம்மாள்
  • நீலாம்பிகை
  1. சிவகாமி சிதம்பரனார்
  2. தேவதாசி முறை ஒழிப்பு முத்துலட்சுமி ரெட்டி
  1. கடவுளுக்கு இறைப்பணி செய்ய, இளம் பெண்களை கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது.
  2. நாளடைவில் இம்முறை பெரும் ஒழிக்ககேட்டிற்கு வித்திட்டது.
  • 1930- சென்னை சட்டமன்றத்தில் மூத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு மசோதாவை அறிமுகப்படுத்தினர்.
  1. மதராஸ் தேவதாசி சட்டம் – 1947 அரசு இயற்றியது
  2. தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள் பற்றி எழுதுக.
  3. இயக்கம் தோன்ற காரணங்கள்
    1. இந்தியாவில் தொழில்கள் வளர முதல் உலகப்போர் காரணமானது
    2. தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியது.
    3. போர் முடிவடைந்ததும் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆட்குறைப்பு நடைபெற்றது.
    4. முக்கியமானோர்
  4. சிங்கார வேலர்
  5. பிபி வாடியா
  6. திரு.வி. கல்யாண சுந்தரனார்

III. சென்னை தொழிலாளர் சங்கம்

  1. 1918 ல் இந்தியாவின் முதல் தொழில் சங்கமாக உருவானது
  2. அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் நாடு 1920 அக்டோபர் 30ல் நடைபெற்றது.
  3. முக்கிய கோரிக்கைகள்
    1. தொழிலாளர்களின் பிரச்சனையில் காவல்துறை தலையீடு தவிர்க்க வேண்டும்.
    2. வேலையில்லாதவர்களுக்கான ஒரு பதிவேட்டை பராமரிக்க வேண்டும்.
    3. காயமடைந்தோர்க்கு இழப்பீடு வழங்குதல்
    4. உடல் நலக்காப்பீடு செய்தல் போன்றவை
    5. தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் வழங்குதல்
    6. சிங்கார வேலரின் பங்களிப்பு
    7. சென்னை தொழிலாளர் சங்கத்தின் முன்னோடி
    8. 1923-முதல் மே தின விழாவை ஏற்பாடு செய்தார்.
    9. தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளை வெளிப்படுத்த தொழிலாளன் என்ற பத்திரிக்கையை வெளியிட்டார்.
    10. சுயமரியாதை இயக்கத்தில் பங்குபெற்றார்.
    11. இந்திய பொதுவுடைமை கட்சியின் ஆரம்பகால தலைவரிகளில் ஒருவர்
    12. பௌத்தத்தை பரிந்துரைத்தார்.

 

  1. இரட்டைமலை சீனிசாவன் (ம) மயிலை சின்னதம்பி ராஜா பற்றி எழுதுக.

இரட்டை மலை சீனிவாசன்: 1859-1945

  1. தாத்தா என அறியப்பட்டவர்
  2. பிறப்பு – காஞ்சிபுரம்
  3. ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி, சமத்துவம், சமூக உரிமைகள் ஆகியவற்றிற்காகப் போராடினார்.
  4. தன்னலமற்ற சேவைக்காக பெற்ற பட்டங்கள் ராவ்சாகிப், ராவ்பகதூர், திவான் பகதூர்
  5. இவரது முதல் சுயசரிதை 1939 ல் வெளியிடப்பட்டது. ஜீவிய சரித சுருக்கம்
  6. 1893 – ஆதிதிராவிட மகாஜன சபை என்ற அமைப்பை உருவாக்கினார்.
  7. தலைவராக பணியாற்றிய அமைப்புகள்
  8. ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டமைப்பு
  9. சென்னை மாகாண ஒடுக்கப்பட்டவகுப்பாரின் கூட்டமைப்பு
  10. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளைச் சந்தித்த சீனிவாசன் அவருடன் நெருக்கமானார்.
  11. 1923 – சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரானார்.
  12. இலண்டனில் நடைபெற்ற முதல், இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் பங்குபெற்றார்.
  13. 1932 பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் இவரும் ஒருவராவார்.

மயிலை சின்னதம்பி ராஜா: 1833 1943

  1. ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவர்
  2. இவர் ஒரு ஆசிரியர்
  3. நீதிக்கட்சியை உருவாக்கியவர்களுள் ஒருவர்
  4. சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்ட மேலவைக்கு முதலில் தேர்வானவர்.
  5. 1920 – 26ல் சென்னை சட்டசபையில் நீதிக்கட்சியின் துணைத்தலைவராக செயல்பட்டவர்.

பங்களிப்பு:

  1. தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டார்
  2. பொது நீர்நிலைகள், பாதைகள் முதல் இடுகாடு வரைப் பயன்படுத்தும் உரிமை ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கும் கோரினார்.
  3. ஆதிதிராவிடர், ஆதி அத்திரர் வார்த்தைகளை பயன்படுத்த கோரினார்.
  4. 1928-அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.
  5. தனித்தொகுதியை கோரிய இவர் பூனா ஒப்பந்தத்திற்குப் பின் கூட்டுத்தொகுதி முறையை ஆதரித்தார்.

 

  1. தாழ்த்தப்பட்டோருக்கான தமிழ்நாட்டில் போராடியவர்கள் / தோற்றம் வளர்ச்சி

பெண்கள்

  1. பெரியார் 1. பெரியார்
  2. அயோத்தி தாசர் 2. பாரதியார்
  3. இரட்டை மலை சீனிவாசன் 3. பாரதிதாசன்
  4. மயிலை சின்னதம்பி ராஜா 4.திரு.வி.க.
  5. பாரதியார் 5. வள்ளலார்
  6. C.N. முதலியார்
  7. எஸ். லட்சுமண ஐயர்

 

Scroll to Top